அதுக்குத்தான் அப்படியொரு பழமொழியா.. விக்னேஷ் சிவனின் ட்வீட்டை டிகோடிங் செய்த அஜித் ரசிகர்கள்!

சென்னை: தாய்லாந்தில் தனது அடுத்த பைக் டூரை ஆரம்பித்து விட்டார் நடிகர் அஜித். அதன் புகைப்படத்தை தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அதன் கேப்ஷனை டிகோட் செய்து வருகின்றனர்.

ஒரு வழியாக போனி கபூர் மற்றும் ஹெச். வினோத்திடம் இருந்து எஸ்கேப் ஆகி விக்னேஷ் சிவன் பக்கம் வந்து விட்டார் அஜித் என்பதே இந்த ட்வீட் மூலம் தெரிகிறது.

இனி ரசிகர்களுக்கு அடிக்கடி அப்டேட் கொடுத்துக் கொண்டே இருப்பார் விக்னேஷ் சிவன் என அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

துணிவு ஷூட்டிங் ஓவர்

துணிவு ஷூட்டிங் ஓவர்

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என தொடர்ந்து 3 படங்களில் நடித்துள்ளார் நடிகர் அஜித். போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் துணிவு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஒரு வழியாக தாய்லாந்தில் முடிந்து விட்டது. பொங்கலுக்கு படம் துணிவுடன் வரும் என்கிற தகவல்களும் டிரெண்டாகி வருகின்றன.

தாய்லாந்தில் பைக் டூர்

தாய்லாந்தில் பைக் டூர்

நடிகர் அஜித் துணிவு படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு அடுத்ததாக தாய்லாந்தில் பைக் டூர் சுற்றப்போகிறார் என ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது நடிகர் அஜித் தாய்லாந்தில் பைக் எடுத்துக் கொண்டு டூர் கிளம்பிய புகைப்படத்தை ஏகே 62 இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பழமொழியை மாற்றி

பழமொழியை மாற்றி

"A Storm before the calm" என நடிகர் அஜித்தின் அட்டகாசமான புகைப்படத்தை பதிவிட்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் பழமொழியை சற்றே மாற்றி போட்டுள்ளார். A Calm before the Storm என்று தான் பழமொழி வரும் விக்னேஷ் சிவன் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

புத்தருக்கு முன்பாக

புத்தருக்கு முன்பாக

அமைதியான புத்தருக்கு முன்பாக புயலாக அஜித் நிற்பதை பார்த்துத் தான் இயக்குநர் விக்னேஷ் சிவன் அப்படி பழமொழியை மாற்றி புதுமொழியை சொல்லி இருக்கலாம் என அஜித் ரசிகர்கள் கண்டுபிடித்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஏகே 62 அப்டேட்

ஏகே 62 அப்டேட்

தீபாவளிக்கு அப்படியே ஏகே 62 படத்தின் அப்டேட் ஒன்றை போட்டு விடு தலைவா என அஜித் ரசிகர்கள் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் இப்பவே கோரிக்கை வைக்க ஆரம்பித்து விட்டனர். ஹெச். வினோத், போனி கபூரை விட்டு விட்டு இனிமேல் விக்னேஷ் சிவன் ஐடியை அஜித் ரசிகர்கள் ஃபாலோ செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

விக்கிக்கு வாழ்த்து

விக்கிக்கு வாழ்த்து

2 ஆண் குழந்தைகளுக்கு அப்பாவாக மாறி உள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன் அடுத்து அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க உள்ள நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் அவரது ட்வீட்டுக்கு கீழ் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் போட்டு வருகின்றனர். நயன்தாராவையும் கேட்டதா சொல்லுங்க விக்கி என வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X