’என் குழந்தைகளின் வருங்கால அம்மாவுக்கு..’ வைரலாகும் விக்னேஷ் சிவன் வெளியிட்ட நடிகை நயன்தாரா போட்டோ!
சென்னை: விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள, நடிகை நயன்தாராவின் போட்டோ வைரலாகி வருகிறது.
Recommended Video
அன்னையர் தினத்தை முன்னிட்டு #அன்னையர்தினம், #HappyMothersDay உட்பட பல ஹாஷ்டேக்குகள் சமூக வலைத்தளங்களில் நேற்று டிரெண்டாகின.
பல்வேறு பிரபலங்கள் தங்கள் அம்மாக்களின் புகைப்படங்களை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

குழந்தையாக இருந்தபோது
சிலர் அம்மாவின் அன்பு பற்றி டச்சிங் பதிவுகளை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது அம்மாவுடன் இருக்கும் சில போட்டோக்களை நேற்று இரவு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில் குழந்தையாக இருந்தபோது எடுத்த போட்டோவும் ஒன்று.

முதன்முறையாக
மற்றொரு போட்டோவில் அவர் அம்மா, நயன்தாராவுக்கு முத்தம் கொடுக்கிறார். நடிகை நயன்தாரா தனது அம்மாவின் புகைப்படத்தை இதற்கு முன் வெளியிட்டதில்லை என்று கூறப்படுகிறது. இப்போதுதான் முதன்முறையாக ஆன்லைனில் அவர் வெளியிட்டுள்ளார். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

நீங்க அழகு
இன்ஸ்டாகிராமில் தனது அதிகாரபூர்வ கணக்கில் இதை நயன்தாரா வெளியிட்டிருந்தாலும் அவர் பெயரில் உள்ள ட்விட்டர் பக்கத்திலும் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அன்னையர் தின வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்துள்ள சில ரசிகர்கள், ‘உங்க அம்மாவை விட நீங்க அழகா இருக்கீங்க' என்று கூறியுள்ளனர்.

கிளியர் பண்ணுங்க
சிலர், விக்னேஷ் சிவன் சார், இது நயன்தாராவின் ட்விட்டர் கணக்கா, இல்லையான்னு கிளியர் பண்ணுங்க?' என்று அவருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 'இது ரசிகர்கள் உருவாக்கிய ட்விட்டர் பக்கம்தான், இது கூட தெரியலையா? 'என்று சிலர் அதற்கு விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில் , நடிகை நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா ஒரு குந்தையை கையில் வைத்திருக்கும் போட்டோவை, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

வருங்கால அம்மா
அதற்கு கேப்ஷனாக, என் குழந்தைகளின் வருங்கால அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் எடக்கு மடக்காக கண்டபடி தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் நக்கலடித்துள்ளனர். இந்த புகைப்படம் நேற்று இரவில் இருந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் தகவல்
இந்நிலையில், நடிகை நயன்தாரா தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்கள் மலையாள பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றன என்றும் ஆன்லைனில் வெளியாவது இதுதான் முதன்முறை என்றும் சில ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். நயன்தாரா தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











