ஒன்பதும் ஒன்றும் சேர்ந்து பத்தானது.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட திருமண புகைப்படம்.. குவியும் வாழ்த்து!
சென்னை: திருமண நிகழ்வின் போது ஒரு புகைப்படத்தைக் கூட கசியவிடாமல் பார்த்துக் கொண்ட நிலையில், முதல்முறையாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் நயன்தாராவுக்கு தாலி கட்டிய பிறகு அவரது நெற்றியில் முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
செந்நிற ரோஜா மலராக நயன்தாரா மின்னும் அழகில் மணமேடையை அலங்கரிக்க மாப்பிள்ளை விக்னேஷ் சிவன் வெட்கத்துடன் முத்தம் கொடுத்த புகைப்படம் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.
மேலும், அதற்கு கேப்ஷனாக விக்னேஷ் சிவன் பதிவிட்டதை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் மணமக்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மனைவியான நயன்தாரா
2015ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக இயக்குநர் விக்னேஷ் சிவனின் மனைவியாக மாறியுள்ளார் நடிகை நயன்தாரா. மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் பார்க் ஹோட்டலில் ஜூன் 9ம் தேதி காலை 10 மணியளவில் இவர்களது திருமணம் சினிமா பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது.

முதல் புகைப்படம்
இன்று காலையிலேயே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தங்கம் நயன்தாராவுடன் பலமுறை டேட்டிங் சென்ற புகைப்படங்களை வரிசையாக அடுக்கி இருந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது முதல் முறையாக நயன்தாராவுடன் மணமேடையில் அவருக்குத் தாலி கட்டிய பின்னர் எடுத்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து
10 எனும் நேர்கோட்டில் அவள் 9 நான் 1.. கடவுள் கருணை, இந்த பிரபஞ்சம், பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் நல்லாசியுடன் நயன்தாராவை திருமணம் செய்து கொண்டேன் என விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், மணமக்களான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை வாழ்த்தி கமெண்ட் போட்டு வருகின்றனர்.

சீக்கிரம் 11 ஆக்குங்க ப்ரோ
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கு வாழ்த்து சொல்லிய இந்த ரசிகர் சீக்கிரம் 11 ஆக்குங்க ப்ரோ என சூப்பரான கமெண்ட்டை போட்டுள்ளார். ஹனிமூனுக்கு கூட நேரமின்றி இருவரும் அடுத்தடுத்த பட வேலைகளில் பிசியாக உள்ளதாக தகவல்கள் இன்னொரு பக்கம் வெளியாகி உள்ளன. நயன்தாரா வீட்டில் குவா குவா சத்தம் எப்போது என்பது அடுத்த கேள்வியாக அமைந்து விடும்.

திலீப் சுப்புராயன் வாழ்த்து
சண்டை பயிற்சி இயக்குநர் திலீப் சுப்புராயன் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமண புகைப்படத்தை வெளியிட்ட நிலையில், வாழ்த்துக்கள் ப்ரோ.. திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையட்டும் என மனமார வாழ்த்தி ட்வீட் போட்டுள்ளார்.

விஜய் ரசிகர்கள் வாழ்த்து
பிகில் படத்தின் பாடல் காட்சியை பதிவிட்டு நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் விஜய் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நயன்தாரா ரசிகர்கள் தங்கள் தலைவியை மணக்கோலத்தில் பார்த்து செம ஹேப்பி ஆகி உள்ளனர். ஏகப்பட்ட பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











