எங்களையா பிரிஞ்சுட்டோம்னு சொன்னீங்க.. இங்க பாருங்க எவ்ளோ க்ளோஸ்னு.. இன்ஸ்டாவை கலக்கும் விக்கி!

Recommended Video

Nayanthara Latest WOW Post vignesh Shivan | Vikky Nayan | Miss Vickie's

சென்னை: நடிகை நயன்தாராவை பிரியும் முடிவில் இருப்பதாக வெளியான தகவலை மறுக்கும் வகையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கலக்கல் போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார்.

ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நயன்தாரா, இன்று உச்ச நடிகையாக வலம் வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கும் அளவுக்கு உழைப்பாலும் விடா முயற்சியாலும் உயர்ந்திருக்கிறார் நயன்தாரா.

முதலில் சிம்புவை காதலித்தார் நயன்தாரா. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் பிரிந்தனர்.

மன உளைச்சல்

மன உளைச்சல்

இதனை தொடர்ந்து இருவரும் நெருக்கமாக இருந்த போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார் நயன்தாரா.

முறிந்த காதல்

முறிந்த காதல்

அவரை தொடர்ந்து பிரபு தேவாவுடன் நெருக்கம் ஏற்பட்டு அவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு போனது விஷயம். ஆனால் திடீரென அந்த காதலும் முறிந்தது.

விக்கியுடன் காதல்

விக்கியுடன் காதல்

அடுத்தடுத்து காதல் தோல்விகளால் மனமுடைந்து போன நயன்தாரா, தொடர்ந்து படங்களில் நடிப்பதில் மட்டும் கவனத்தை செலுத்தினார். இந்நிலையில் விக்னேஷ் சிவனுக்கு அவருக்கு காதல் மலர்ந்தது.

வெளிநாடுகளில் சுற்றல்

வெளிநாடுகளில் சுற்றல்

இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். பிறந்தநாள், கிறிஸ்துமஸ், தீபாவளி என அனைத்தையும் இருவரும் வெளிநாடுகளில் ஒன்றாக கொண்டாடி வருகின்றனர்.

வைரலான போட்டோ

வைரலான போட்டோ

அவர்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும். இந்நிலையில் புத்தாண்டின் போது நயன்தாரா மட்டும் தனியாக எடுத்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது.

வெளியான தகவல்

வெளியான தகவல்

இதனை தொடர்ந்து ஜீ தமிழ் சினி விருது விழாவிலும் நயன்தாரா மட்டும் தனியாக கலந்து கொண்டார். இதனால் இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் இருவரும் பிரியும் முடிவில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

அவர்தான் எடுத்தார்

அவர்தான் எடுத்தார்

இதனை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மறுத்தனர். நயன்தாரா தனியாக இருக்கும் அந்த போட்டோவை எடுத்ததே விக்னேஷ் சிவன்தான் என்ற தகவலும் வெளியானது.

ரொம்ப நெருக்கம்

இந்நிலையில் நாங்கள் பிரியவில்லை, ரொம்ப நெருக்கமாக இருக்கிறோம் என்று கூறும் வகையில் நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

அதே புடவை

அதே புடவை

அந்த போட்டோவில் நயன்தாரா ஜீ தமிழ் விருது விழாவில் பங்கேற்ற அதே அரக்கு நிற புடவையில் அதே கெட்டப்பில் உள்ளார். இதனால் நிகழ்ச்சிக்கு முன்போ அல்லது பங்கேற்ற பின்போ அவர் விக்னேஷ் சிவனை சந்தித்தது உறுதியாகியுள்ளது.

விக்கியின் செல்பி

அந்த போட்டோவில் நயன்தாரா விக்னேஷ் சிவனின் நெஞ்சில் சாய்ந்திருக்கிறார். இந்த போட்டோவை விக்னேஷ் சிவன் செல்பியாக எடுத்திருக்கிறார்.

இன்ஸ்டாவில்

மேலும் நயன்தாரா மிஸ் விக்கிஸ் என்ற சிப்ஸ் பாக்கெட்டால் கண்கள் மட்டுமே தெரியும்படி முகத்தை மறைத்து போஸ் கொடுத்திருக்கிறார். அந்த போட்டோவையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.

அள்ளும் லைக்ஸ்

இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. மேலும் இந்த போட்டோக்களுக்கு லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X