காத்துவாக்குல சில மொமென்ட்ஸ்.. 6 ஆண்டு காதலை கொண்டாடும் விக்கி - நயன்.. வைரலாகும் 'ரகசிய' போட்டோஸ்!
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடனான 6 ஆண்டு காதலை கொண்டாடும் வகையில் அரிய போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான படம் நானும் ரவுடிதான். இந்தப் படத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி லீடிங் ரோலில் நடித்திருந்தனர்.
நயன்தாரா வாய்ப்பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளி பெண்ணாக அட்டாகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இருவருக்கும் காதல் மலர்ந்தது
இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று தங்களின் காதலை வளர்த்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இருவரும் வெளிநாடுகளுக்கு சென்றதாக தெரியவில்லை.

லிவிங் டுகெதரில்
மாறாக கடந்த ஆண்டு இருவரும் கோவா ரிசார்ட்டில் ஓய்வை கழித்த போட்டோக்கள் இணையத்தில் வைரலானது. இதேபோல் ஓணம் பண்டிகையை கொண்டாடியது உள்ளிட்ட பல போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி ட்ரென்ட்டானது. சில ஆண்டுகளாக இருவரும் லிவிங் டுகெதரில் உள்ளனர்.

கோவில்களில் வழிபாடு
அண்மையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நயன்தாரா, தனக்கும் விக்கிக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறினார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் உள்ள கோவில்களில் விக்கியும் நயன்தாராவும் வழிபாடு செய்து வருகின்றனர். அந்த போட்டோக்களும் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

காத்துவாக்குல சில மொமென்ட்ஸ்
இந்நிலையில் நானும் ரவுடிதான் படம் வெளியாகி 6 ஆண்டுகள் ஆவதையொட்டி, நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த சில அரிய போட்டோக்களை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த போட்டோக்களுக்கு, 6 ஆண்டுகள் ஆனது போன்ற உணர்வே இல்லை என்று ஹார்ட்டி ஐகான்களுடன் காத்துவாக்குல சில மொமென்ட்ஸ் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
Recommended Video

ரசிகர்களை குஷிப்படுத்தும் விக்கி
நயன்தாரா சோஷியல் மீடியாவில் இல்லை என்றாலும் விக்னேஷ் சிவன் அடிக்கடி தங்களின் போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் மும்பை சித்தி விநாயக் கோவிலில் நயன்தாராவுடன் வழிபாடு செய்த போட்டோக்களை விக்னேஷ் சிவன் ஷேர் செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











