இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
சென்னை: சீக்கிரமா கல்யணம் பண்ணிக்கோங்க, இப்படி அடிக்கடி நெருக்கமாக இருக்கும் போட்டோவை போட்டு எங்க இதயங்களை உடைக்காதீங்க என நயன்தாரா விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் செம காண்டில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
காத்துவாக்குல 6 வருஷத்தை கடக்க போகிறது நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல்.
எப்போதுமே பண்டிகை நாட்களில் புதுப் போட்டோ போட்டு வைரலாக்கி வந்த நிலையில், இப்போ என்ன விசேஷம் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

நீடிக்கும் காதல்
தென்னியாவின் லேடி சூப்பர்ஸ்டாராக திகழும் நயன்தாரா, நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட காதல் இன்னமும் தொடர்கிறது. இருவரும் இந்த வருஷம் கல்யாண சேதி சொல்வாங்க, அடுத்த வருஷம் சொல்லுவாங்க என ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்து வருகின்றனர்.

லிவ்வின் ரிலேஷன்ஷிப்
கொரோனா லாக்டவுனில் நயன்தாராவும் விக்னெஷ் சிவனும் ஒரே வீட்டில் தங்கி இருந்ததாக தகவல்கள் வெளியாகின. திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருவதாகவும் ஏகப்பட்ட வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. எங்கே சென்றாலும், ஒன்றாக சுற்றுவதும், அடிக்கடி செல்ஃபிக்களை போட்டு ரசிகர்களை வெறுப்பேற்றுவதுமாக செயல்பட்டு வருகின்றனர்.

ஓவர் க்ளோஸ்
ஓணம், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என பண்டிகை நாட்களில் போட்டோக்களை போட்டு வைரலாக்கி வரும் விக்னேஷ் சிவன், நயன்தாரா பொங்கலை முன்னிட்டு எந்தவொரு போட்டோவும் போடவில்லை. இந்நிலையில், தற்போது இருவரும் ஓவர் க்ளோஸாக இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காண்டாகும் ரசிகர்கள்
சன் டே ஸ்பெஷலாக வந்துள்ள இந்த க்யூட் ரொமான்டிக் செல்ஃபியை பார்த்த ரசிகர்கள் வேற மாறி என்றும், அழகான ஜோடி என்றும், காலையிலேயே கடுப்பேத்துறடா, விர்ஜின் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என வாழ்த்தியும் கடுப்பாகி திட்டியும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

சினிமா பக்கம்
ரொமான்ஸை தாண்டி அப்படியே சினிமா பக்கம் சென்றால், நயன்தாரா இப்போ விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக காத்துவாக்குல ரெண்ட் காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும், விரைவில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் படத்தின் ரிலீசுக்கும் காத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











