ஆபீஸுக்கு வந்து பிச்சை எடுத்துட்டு பேசுற பேச்ச பாரு: விக்னேஷ் சிவன் விளாசல்
Recommended Video

சென்னை: விக்னேஷ் சிவன் ட்விட்டரில் ஒருவருடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் கடந்த மாதம் ரிலீஸானது. இந்நிலையில் ஒருவர் கடந்த மாதம் ஒரு படம் கூட ஹிட்டாகவில்லை என்று ட்வீட்டியிருந்தார்.
அந்த ட்வீட்டை பார்த்த விக்னேஷ் சிவனுக்கு கோபம் வந்துவிட்டது.

ட்வீட்
இது போன்ற ஆட்கள் நம் துறைக்கு கிடைத்த சாபம். நாம் எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும் நம் நம்பிக்கையை இழக்கும்படியே செய்வார்கள்.(அலுவலகத்திற்கு வந்து பணத்திற்காக பிச்சை எடுத்துவிட்டு இதையும் செய்வார்கள்) இவன மாதிரி நெகட்டிவான ஆளுங்கள பார்த்தோல வெரட்டி என ட்வீட் போட்டு அதை நீக்கிவிட்டார் விக்னேஷ் சிவன்.

ட்வீட்
இந்த மேனியாக்குகள் அப்பாவி ஹீரோயின்களுக்கு சும்மா ட்வீட் போட்டு அழகான புகைப்படம், ஆ, வாவ், சோ ஸ்வீட் என்று போட்டு லைக்ஸ் மற்றும் பதில் பெறுகிறார்கள். அதோட நிறுக்கோங்க மேனியாக்ஸ். ஒரு படம் எப்படி வெல்கிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியாது. டிஎஸ்கேவால் மகிழ்ச்சியாக உள்ளோம் என்று விக்னேஷ் சிவன் ட்வீட்டியுள்ளார். மேலும் சூர்யா நடுவிரலை காட்டும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

புகைப்படம்
விக்னேஷ் சிவன் போட்டுள்ள புகைப்படத்தை பார்த்த அந்த நபரும் ஒரு நடிகர் தனது நடுவிரலை காட்டும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

ஹீரோ
ஒரு படத்தின் வசூல் தயாரிப்பாளரின் விஷயம். ரசிகர்கள் படத்தை என்ஜாய் செய்ய உள்ளார்கள். படத்தை ரசிக்கும் காலம் போய்விட்டது. அனைவரும் விமர்சிக்கத் துவங்கிவிட்டனர். இது தேவையில்லை. வாழ்க்கை அழகானது. பாசிட்டிவாக இருக்க முயற்சிப்போம் என்கிறார் விக்னேஷ் சிவன்.


Click it and Unblock the Notifications











