க்யூட்டான செல்ஃபியுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கிய நயன்… விக்கியோட ரியாக்‌ஷன் பாருங்க

சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வரும் 18ம் தேதி தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

முதன்முறையாக தனது இரட்டை ஆண் குழந்தைகளுடன் பிறந்தாளை கொண்டாடவுள்ள நயன், அதற்காக இப்போதே தயாராகி வருகிறாராம்.

தீபாவளி தினத்தில் தனது குழந்தைகளுடன் ரசிகர்களுக்கு வாழ்த்துக் கூறிய நயன்தாரா - விக்கி தம்பதியினர், இப்போது செம்ம க்யூட்டான அப்டேட்டை கொடுத்துள்ளனர்.

நயன் – விக்கியின் செலிப்ரேஷன்

நயன் – விக்கியின் செலிப்ரேஷன்

லேடி சூப்பர் ஸ்டாராக கெத்து காட்டி வரும் நயன்தாரா, ஜூன் மாதம் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பிரபலங்கள் முன்னிலையில் மகாலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற நயன் - விக்கி திருமணத்தில், முன்னணி நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அவர்களுக்கு வாழ்த்துக் கூறினர். இதனைத் தொடர்ந்து நயன் - விக்கி தம்பதிக்கு அக்டோபர் 9ம் தேதி இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.

ரெடியான நயன்தாரா

ரெடியான நயன்தாரா

இந்நிலையில், நயன் - விக்கி தம்பதியினருக்கு வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்தது சர்ச்சையானது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் நடைபெற்ற விசாரணையில். விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் நயன் - விக்கி தம்பதி குழந்தை பெற்றுக்கொண்டது தெரியவந்தது. மேலும், அவர்கள் இருவரும் 2022 மார்ச் மாதமே பதிவுத் திருமணம் செய்துகொண்டதும் உறுதியானது. வாடகைத்தாய் பிரச்சினை ஒருவழியாக முடிவுக்கு வந்ததை அடுத்து இருவரும் அடுத்து ஒரு செலிப்ரேஷனுக்கு ரெடியாகிவிட்டனர்.

குழந்தைகளுடன் நயன் பிறந்தநாள்

குழந்தைகளுடன் நயன் பிறந்தநாள்

நயன்தாரா வரும் 18ம் தேதி 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த சில வருடங்களாக நயன் தனது பிறந்தநாளை விக்னேஷ் சிவனுடன் வெளிநாடு சென்று கொண்டாடி வந்தார். இந்நிலையில், இந்தாண்டு முதன் முறையாக அவரது குழந்தைகளுடன் கொண்டாட முடிவு செய்துள்ளாராம். இதற்காக நயனும் விக்கியும் இப்போதே ஸ்பெஷலாக தயாராகி வருகின்றனர். மேலும், இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை நயன் - விக்கி தம்பதி இப்போதே தொடங்கிவிட்டதாக தெரிகிறது.

க்யூட் செல்ஃபி

க்யூட் செல்ஃபி

நயன் - விக்கி இருவரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துகொண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். ஒயிட் ட்ரெஸ்ஸில் க்யூட்டாக விக்கி - நயனுடன் இன்னும் இருவரும் ஜோடியாக அந்த செல்ஃபியில் இருக்கின்றனர். அதில் ஒருவர் ஸ்டைலிஸ்ட் நீரஜ் கோனா என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், நயன் அடுத்த போட்டோ ஷூட்க்கு ரெடியாகிவிட்டதாக தெரிகிறது. முக்கியமாக நான்கு பேருமே வெள்ளை நிற ட்ரெஸ்ஸில் இருப்பது செம்ம க்யூட்டாக இருக்கிறது. நயனும் விக்கியும் கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கும் போட்டோ ரசிகர்களை ரொம்பவே இம்ப்ரஸ் செய்து வருகிறது.

வீட்டில் விருந்து

வீட்டில் விருந்து

பிறந்தநாள் கொண்டாட்டத்தை செல்ஃபியுடன் தொடங்கிய நயனுக்கு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் உள்ள தங்களது வீட்டிலேயே பிறந்தநாளை கொண்டாடவுள்ள நயன், உறவினர்களுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் விருந்து கொடுக்க முடிவு செய்துள்ளாராம். இந்நிலையில், மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள 'கோல்ட்' திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X