இது அதிகாரத்திமிர்.. என் படைப்பை விக்னேஷ் சிவன் திருடிட்டாரு.. பிரபல இயக்குநர் குற்றச்சாட்டு!
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் LIC - Love Insurance Company எனும் தலைப்பில் உருவாக உள்ள படத்துக்கு நேற்று பூஜை போட்டது.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தைத் தொடர்ந்து அஜித்தை வைத்து ஏகே 62 படத்தை இயக்கவிருந்த விக்னேஷ் சிவனுக்கு கடைசி நேரத்தில் நடந்த பிரச்சனை காரணமாக அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிப்பில் அனிருத் இசையில் பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகப் போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த டைட்டில் தன்னுடைய டைட்டில் என இயக்குநர் ஒருவர் முறையிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் மீது குற்றச்சாட்டு: விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு L I C என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் LIC என்கிற பெயரை 2015ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான suma pictures-ன் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
இதை அறிந்த திரு விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தபெயரை தரக்கோரி தனது மேலாளர் திரு மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால் LIC என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன். ஆக இந்த தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை திரு விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார். அப்படி இருந்தும் இந்த தலைப்பை அவர் தனது படத்திற்கு வைக்கிறார் என்று சொன்னால் அது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும். இச்செயல் முழுக்க முழுக்க அதிகாரதன்மை கொண்டது.
அது என்னோட டைட்டில்: அவரின் இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் நிற்கிறேன். LIC என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால் அதை திரு விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்று இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
இனியும் இச்செயலை திரு விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என இயக்குநர் எஸ்.எஸ். குமரன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











