LIK படத்துல குட்டி தீமாவா நடிச்ச பாப்பா.. விக்னேஷ் சிவன் எவ்ளோ அழகா சொல்லித்தராரு பாருங்க!

சென்னை: கடந்த வாரம் தமிழில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் தெலுங்கில் வெளியான டக்கோயிட் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியுள்ளார் அனம் கவுர். டக்கோயிட் படப்பிடிப்பில் மிருணாள் தாக்கூர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், விக்னேஷ் சிவன் LIK செட்டில் தனக்கு நடிக்கச் சொல்லிக் கொடுத்த வீடியோவையும் ஷேர் செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஸ்ரீதேவி, மீனா, ஷாலினி, அனிகா சுரேந்திரன் என குழந்தை நட்சத்திரங்களாக நடித்து பின்னர் சினிமாவில் ஹீரோயினாக பல குழந்தை நட்சத்திரங்கள் கலக்கி உள்ளனர்.

Vignesh Shivan teach acting to Kutty Dheema of LIK video goes viral

சிறு வயதிலேயே கேமராவை பார்த்து எந்தவொரு பயமும் இன்றி சொல்லித் தரும் வசனங்களை அப்படியே மனப்பாடம் செய்து பேசுவது மட்டுமின்றி நடித்தும் அசத்தி வருகின்றனர் குட்டீஸ்.

எல்ஐகே குட்டி க்ரித்தி ஷெட்டி: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள க்ரித்தி ஷெட்டிக்கு அம்மாவாக மாளவிகா நடித்துள்ளார். வாலமீனு எனும் கதாபாத்திர பெயரையே விக்னேஷ் சிவன் அவருக்கு சூட்டியுள்ளார். சிறு வயதில் தீமாவை கண்டுக்கொள்ளாமல் அவங்க அம்மா ரீல்ஸ் போடும் மோகத்தில் இருப்பதும், குழந்தைகள் பெற்றோர்கள் கவனிப்பு இல்லாமல் எப்படி போன் வளர்த்த ரோசாவாக மாறுகின்றன என்பதை அழகாக படமாக்கியிருப்பார் விக்னேஷ் சிவன். க்ரித்தி ஷெட்டியை விட அழகு பொம்மை போல குட்டி வயது தீமா கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் அனம் கவுர் நடித்து அசத்தியிருப்பார்.

`

அழகா சொல்லித்தரும் விக்னேஷ் சிவன்: என்னதான் படம் நல்லா இல்லை என விக்னேஷ் சிவனை ட்ரோல் செய்தாலும், தனது கனவுக்குழந்தையை நினைத்தபடியே திரையில் கொண்டு வர ஒவ்வொரு நாளும் செட்டில் அவர் போட்ட உழைப்பு அவருக்குத்தான் தெரியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அந்த கதாபாத்திரங்களாக மாற்ற இயக்குநர்கள் ரொம்பவே மெனக்கெட வேண்டும். அம்மாவிடம் கேக் செய்து தாம்மா எனக் கேட்கும் வசனத்தை அந்த குழந்தை புரிந்துக் கொள்ளும் படி செம க்யூட்டாக விக்னேஷ் சிவன் பக்கத்தில் அவரே உட்கார்ந்து அசிஸ்டண்ட் டைரக்டர்களை அனுப்பாமல் சொல்லிக் கொடுத்து நடிக்க வைக்கும் காட்சியை அனம் கவுர் ஷேர் செய்துள்ளார்.

`

மிருணாள் தாக்கூர் படத்திலும்: மிருணாள் தாக்கூர், ஆத்வி சேஷ் நடிப்பில் வெளியான டக்கோயிட் திரைப்படத்திலும் அனம் கவுர் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில், மிருணாள் தாக்கூர் உடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X