நீங்கத்தான் தாலி எடுத்து கொடுக்கணும்..ரஜினிகாந்தை லாக் செய்த நயன் - விக்கி..கல்யாண சுவாரஸ்யம்

சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ரெசார்ட்டில் நடந்து முடிந்துள்ளது.

Recommended Video

Nayanthara Wedding | மணமக்களை வாழ்த்திய Celebrities and Families *Celebrity | Filmibeat Tamil

இந்தத் திருமணத்தையொட்டி அன்னதானங்கள் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

திருமணத்தில் ரஜினி, அஜித் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமணம்

விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமணம்

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் பிரபல ரெசார்ட்டில் நடைபெற்று முடிந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு இதுகுறித்து தகவல் வெளியிட்ட விக்னேஷ் சிவன், முக்கியமான குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

களைகட்டிய திருமணம்

களைகட்டிய திருமணம்

குறைவான திரையுலக பிரபலங்களுக்கே அழைப்பு கொடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தாலும் இன்றைய தினம் அவர்களது திருமணம் களைகட்டியது. ரஜினிகாந்த், அஜித், சூர்யா, கார்த்தி, சரத்குமார், கௌதம் மேனன், அனிருத், சரண்யா என முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

புகைப்படங்களை பகிர்ந்த விக்னேஷ்

புகைப்படங்களை பகிர்ந்த விக்னேஷ்

திருமணம் முடிந்த சில மணிநேரத்தில் தன்னுடைய திருமணத்தின் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார் விக்னேஷ் சிவன். இந்தப் புகைப்படங்களில் இந்த ஜோடியின் அழகு அள்ளியது. ரசிகர்கள் நேரில் சென்று வாழ்த்த முடியாவிட்டாலும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

தாலி எடுத்துக் கொடுத்த சூப்பர்ஸ்டார்

தாலி எடுத்துக் கொடுத்த சூப்பர்ஸ்டார்

இதனிடையே இந்த திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுத்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் கோரிக்கையை அடுத்து ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுக்க, விக்னேஷ் சிவன், அதை நயன்தாராவின் கழுத்தில் கட்டினார்.

திருமணத்தில் முடிந்த காதல்

திருமணத்தில் முடிந்த காதல்

ஆகம விதிப்படி 20 புரோகிதர்கள் சூழ, திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தாலியை விக்னேஷ் சிவன் கட்டியவுடன் உணர்ச்சிப் பெருக்குடன் நயன்தாரா அதை கையில் எடுத்துப் பார்த்த தருணம் சிறப்பாக அமைந்தது. 7 ஆண்டுக்காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. இது நயன்தாராவிற்கு மட்டுமில்லாமல் விக்னேஷ் சிவனுக்கும் சிறப்பான தருணம்தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X