நயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா?

By Siva

Recommended Video

நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிக்க இதுதான் காரணம்

சென்னை: நயன்தாரா நடிக்க உள்ள த்ரில்லர் படத்தை தயாரிக்கிறார் விக்னேஷ் சிவன்.

2019ம் ஆண்டு விஸ்வாசம் படத்துடன் நயன்தாராவுக்கு நல்ல ஆண்டாகவே துவங்கியது. ஆனால் அதன் பிறகு வெளியான ஐரா, கொலையுதிர்காலம், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்கள் சரியாகப் போகவில்லை.

Vignesh Shivan to director Nayantharas upcoming thriller

இந்நிலையில் அவர் காதல் 2 கல்யாணம் படம் புகழ் மிலிந்த் ராவ் இயக்கும் த்ரில்லர் படத்தில் நடிக்க உள்ளார். ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த த்ரில்லர் படத்தை நயன்தாராவின் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறாராம்.

முன்னதாக விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து படம் இயக்கினார். தற்போது ஒரு படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் நயன்தாரா. படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் துவங்குமாம்.

படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரா, கொலையுதிர்காலம் ஆகிய ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் தோல்வி அடைந்த போதிலும் நயன்தாரா துணிச்சலாக மிலிந்த் ராவ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் நயன்தாரா விஜய்யின் பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி மெகா பட்ஜெட் படத்திலும் நடித்துள்ளார்.

முன்பெல்லாம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்த நயன்தாரா தற்போது பெரிய ஹீரோக்களின் படங்களிலும் நடிக்கிறார். நயன் இப்படி இறங்கி வந்ததால் சில நடிகைகள் அவர் மீது கடுப்பில் உள்ளனர். ஏனென்றால் நயன்தாரா தனது கொள்கையை தளர்த்தியதால் அவர்களின் மார்க்கெட் படுத்துவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X