சிரிப்பு சிரிப்பா வருது: ப்ளூ சட்டையை மரண பங்கம் செய்த விக்னேஷ் சிவன்
Recommended Video

சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவன் ப்ளூ சட்டை மாறனை கலாய்த்துள்ளார்.
நீரஜ் பாண்டே இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்த ஸ்பெஷல் 26 படத்தின் தழுவல் தான் தானா சேர்ந்த கூட்டம். தானா சேர்ந்த கூட்டம் படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருந்தார்.
தானா சேர்ந்த கூட்டம் ஸ்பெஷல் 26 படம் போன்று இல்லை என்று அவர் விமர்சித்தார்.

கோபம்
ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை கேட்ட சூர்யா ரசிகர்கள் கடுப்பானார்கள். இந்த ஆளுக்கு குறை சொல்லவில்லை என்றால் தூக்கம் வராது போல என்றனர்.

கலாய்
தனது படத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறனை விக்னேஷ் சிவன் கிண்டல் செய்துள்ளார். அவர் என்ன சொல்வது என் படம் ஸ்பெஷல் 26 போன்று இருக்கக் கூடாது என்று தான் நானே நினைத்தேன் என தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

விருப்பம்
என்னிடம் கொடுத்த கதையை என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக எடுத்துள்ளேன். இதில் அந்த ப்ளூ சட்டை மாறன் அனுபம் கீர் இல்லை பாதாம் கீர் இல்லை என்று சொல்வதை கேட்டால் சிரிப்பு சிரிப்பா வருகிறது என்கிறார் விக்னேஷ் சிவன்.

வேண்டுகோள்
தானா சேர்ந்த கூட்டம் படத்தை ரிலீஸ் செய்யும் முன்பு விக்னேஷ் சிவன் தமிழ் ராக்கர்ஸுக்கு கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக விக்கி சிவகார்த்திகேயனை இயக்க உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











