Vignesh Shivan: “மிஸ்ஸான AK62... கை கொடுக்கும் விஜய் பட தயாரிப்பாளர்.. விக்னேஷ் சிவனின் மெகா கூட்டணி
சென்னை: அஜித்தின் ஏகே 62 படத்தை மிஸ் செய்துவிட்ட ஃபீலிங்ஸில் இருந்தார் விக்னேஷ் சிவன்.
ஆனால், அவரது புதிய படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது.

தற்போது அதிலும் பெரிய மாற்றம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படத்தை விஜய்யின் லியோ பட தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கவுள்ளாராம்.
விக்னேஷ் சிவனுடன் இணையும் மெகா கூட்டணி
'போடா போடி' திரைப்படம் மூலம் இயக்குநரானவர் விக்னேஷ் சிவன். அதன் பின்னர் அவர் இயக்கிய நானும் ரவுடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்கள், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனால், லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கும் அவரது 62வது படத்தை இயக்கவிருந்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த பிப்ரவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடைசி நேரத்தில் அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் விக்னேஷ் சிவன். இப்போது அஜித்தின் ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். ஏகே 62 மிஸ்ஸானதால் விக்னேஷ் சிவனுக்கு உடனடியாக அடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதேநேரம் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் படம் இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது.
விரைவில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தப் படம் ராஜ்கமல் ஃபிலிம்ஸிடம் இருந்து லலித் குமாரின் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு கை மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல், விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தில் லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன், எஸ்ஜே சூர்யா, மிஷ்கின் லீடிங் ரோலில் நடிக்கவுள்ளார்களாம்.
அதேபோல், அனிருத் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காதலை பின்னணியாக வைத்து ரொமான்ஸ் ஜானரில் இந்தப் படம் உருவாகவுள்ளதாம். மேலும் லவ் டுடே படத்தைப் போல மொபைல் டெக்னாலஜியையும் பின்னணியாக வைத்து இயக்கவுள்ளாராம் விக்னேஷ் சிவன். விரைவில் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை தொடங்க விக்னேஷ் சிவன் முடிவுசெய்துள்ளாராம்.
அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கவிருந்த விக்னேஷ் சிவன், தற்போது விஜய் பட தயாரிப்பாளருடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. லலித் குமார் விஜய்யின் உறவினர் என்பதால், இந்த ப்ராஜெக்ட் தளபதியின் சம்மதத்துடன் ஓகே ஆகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











