Vignesh Shivan: விக்னேஷ் சிவன் பட டைட்டில் ரெடி... பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை?

சென்னை: விக்னேஷ் சிவனின் புதிய படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது.

ஆனால், பட்ஜெட் அதிகம் என்பதால் தற்போது இந்தப் படம் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்துக்கு சென்றுவிட்டதாம்.

அதன்படி, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ள புதிய படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் குறித்தும், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடி யார் என்பது பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.

Vignesh Shivan: Vignesh Shivan, Pradeep Ranganathan Movie Title as LIC

விக்னேஷ் சிவன் பிரதீப் கூட்டணி கன்ஃபார்ம்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் காதல் கணவர் விக்னேஷ் சிவன், தற்போது தனது புதிய படத்தின் வேலைகளில் பிஸியாகிவிட்டார். 'போடா போடி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன், அதன்பின் நானும் ரவுடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தன.

அதன் தொடர்ச்சியாக லைகா தயாரிப்பில் அஜித்தின் ஏகே 62 படத்தின் இயக்குநராக கமிட்டானார் விக்கி. ஆனால், கடைசி நேரத்தில் ஏகே 62 படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் விக்னேஷ் சிவன். இதனால் சில நாட்கள் புதிய கதை எழுதி வந்த விக்கி, தனது புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணையவுள்ளார். இந்தப் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், பிரதீப் ரங்கநாதனின் சம்பளம், பட்ஜெட் ஆகியவை அதிகம் என்பதால், ராஜ்கமல் நிறுவனம் பின்வாங்கிவிட்டது.

இதனையடுத்து லலித் குமாரின் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், எஸ்ஜே சூர்யா, மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் கமிட்டாகியுள்ளனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதமே தொடங்கவுள்ளதாம்.

காதலை பின்னணியாக வைத்து ரொமான்ஸ் ஜானரில் இந்தப் படம் உருவாகவுள்ளதாம். அதேபோல், லவ் டுடே படத்தைப் போல மொபைல் டெக்னாலஜியை அடிப்படையாக வைத்து 2கே கிட்ஸ்களுக்கான படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 60 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு LIC - Love Insurance Company என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X