அஜ்மீர் தர்காவுக்கு சென்ற விக்னேஷ் சிவன்: எதற்காக சென்றார்?
Recommended Video
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் அஜ்மீர் தர்காவுக்கு சென்றுள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் மும்பை சென்று ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். அப்பொழுது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.

அவர் மும்பைக்கு மட்டும் செல்லவில்லை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கும் சென்றுள்ளார். அவர் எதற்காக தர்காவுக்கு சென்றிருக்கக்கூடும் என்று ரசிகர்கள் யூகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒன்று சிவகார்த்திகேயன் படம் தொடர்பாக இருக்கலாம், இல்லை ரஜினி படமாக இருக்கலாம் அதுவும் இல்லை என்றால் காதலி நயன்தாராவுக்காக பிரார்த்தனை செய்ய சென்றிருக்கலாம் என்று ஆளாளுக்கு யூகிக்கிறார்கள்.
புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட விக்கி எதற்காக சென்றார் என்பதை தெரிவிக்கவில்லை. அதனால் தான் ரசிகர்கள் குழம்பியுள்ளனர். சிலரோ தலைவி எங்கப்பா, தனியாக சென்றீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
சில குசும்புக்கார நெட்டிசன்களோ விக்னேஷ் சிவன் மதம் மாறிவிட்டார் என்று கொளுத்திப் போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











