இன்னொரு இயக்குநருடன் இணையும் விக்னேஷ் சிவன்?.. அதுவும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டா?
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டுடன் களமிறங்கவிருப்பதாகவும், இன்னொரு இயக்குநருடன் கைகோர்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
போடா போடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் நானும் ரௌடிதான் படம் மூலம் கோலிவுட்டில் கவனம் ஈர்த்தார். அந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதனையடுத்து சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். இருப்பினும் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஏகே 62வில் கமிட்டான விக்னேஷ் சிவன்
இதனையடுத்து நவரசா ஆந்தாலஜியில் குறும்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படமும் பெரிதாக போகவில்லை. சூழல் இப்படி இருக்க அஜித்தின் 62ஆவது படத்தை இயக்க கமிட்டானார் விக்னேஷ் சிவன். இந்த செய்தி வெளியானதும் கோலிவுட்டே ஆச்சரியப்பட்டது. மேலும், அஜித்தை வைத்து ஒரு சிறந்த படத்தை விக்னேஷ் சிவன் கொடுத்துவிடுவாரா என்ற கேள்வியையும் பலர் முன்வைத்தனர்.

ஏகே 62விலிருந்து வெளியேற்றப்பட்ட விக்னேஷ் சிவன்
நிலைமை இப்படி இருக்க விக்னேஷ் சிவன் சொன்ன முழு கதையும் அஜித்துக்கும், லைகாவுக்கும் பிடிக்காமல் போக ஏகே 62விலிருந்து வெளியேற்றப்பட்டார் விக்னேஷ் சிவன். கதையை டெவலப் செய்வதற்கு பல மாதங்கள் நேரம் கொடுத்தும் ஒழுங்காக கதையை டெவலப் செய்யாமல் விக்னேஷ் சிவன் இருந்ததுதான் தயாரிப்பு தரப்புக்கு அவர் மேல் கோபம் என பேசப்பட்டது. இதனால் விக்னேஷ் சிவன் அடுத்த என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

நயன்தாராவை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்?
இப்படி பல பேச்சுக்கள் விக்னேஷ் சிவனை சுற்றி வட்டமடிக்க அவர் யாரிடமும் கால்ஷீட் கேட்காமல் நேரடியாக நயன்தாராவை வைத்து ஹீரோயின் சப்ஜெக்ட்டை எடுக்கவிருப்பதாகவும்; அதற்கு நயனும் ஒத்துக்கொண்டார். அந்தப் படத்திற்காக கதையை உருவாக்கும் பணியில் விக்னேஷ் சிவன் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது புது தகவல்கள் கோலிவுட்டில் வெளியாகியுள்ளன.

டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டுடன் களமிறங்கும் விக்னேஷ் சிவன்?
இந்நிலையில் ஏகே 62வில் தனக்கு நேர்ந்த அவமானத்தை போக்குவதற்கு வேறு ஒரு ஹீரோவை வைத்துதான் படம் செய்ய வேண்டும் என விக்னேஷ் சிவன் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக தனது ஆஸ்தான ஹீரோவான விஜய் சேதுபதியிடம் தான் தயார் செய்துவைத்திருக்கும் ஆக்ஷன் கதையை கூறியிருக்கிறாராம். அதுமட்டுமின்றி லவ் டுடே படத்தின் மூலம் சென்சேஷ்னல் ஹீரோவாகியிருக்கும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனிடமும் கதையை சொல்லிவிட்டாராம். எனவே இந்தப் படம் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக உருவாகும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.


Click it and Unblock the Notifications











