"லவ் பண்ணலாமா வேணாமா"என கேட்டு சிம்புவை வாழ்த்திய விக்னேஷ்சிவன்

சென்னை : சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வித்தியாசமாக டைரக்டர் விக்னேஷ் சிவன் வாழ்த்தி உள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விக்னேஷ் சிவன் - சிம்பு காம்போ மீண்டும் இணைய வேண்டும் என ஏராளமான ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

சிம்புவின் பிறந்தநாளுக்காக பிரபலங்கள் பலரும் சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிம்புவின் போட்டோ, வீடியோக்களை பகிர்ந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாழ்த்து சொல்லி உள்ளனர். மற்றவர்களை விட விக்னேஷ் சிவன் வாழ்த்தி உள்ளது தான் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

விக்னேஷ் சிவன் - சிம்பு காம்போ

விக்னேஷ் சிவன் - சிம்பு காம்போ

சிம்பு, வரலட்சுமி நடித்த போடா போடி படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கி இருந்தார். 2012 ம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு பிறகு இவர்களின் காம்போ மீண்டும் இணையவேயில்லை. இதற்கிடையில் விக்னேஷ் சிவனின் காதலியான நயன்தாராவும், சிம்புவும் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கள் கோலிவுட்டில் பல காலமாக நிலவி வந்தது.

அப்படி என்ன சொல்லிருக்கார்

அப்படி என்ன சொல்லிருக்கார்

இதனால் லவ் பண்ணலாமா வேணாமா என்ற வாசகத்துடன் விக்னேஷ் சிவன், சிம்புவிற்கு வாழ்த்து கூறி உள்ளதை ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். வேறு என்ன சொல்லி வாழ்த்தி இருப்பார் என ரசிகர்கள் ஆவலாக விக்னேஷ் சிவனின் ட்வீட்டை படித்து வருகின்றனர்.

லவ் பண்ணலாமா வேணாமா

லவ் பண்ணலாமா வேணாமா

இந்நிலையில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு சோனி மியூசிக் சவுத், சிம்பு நடித்த போடா போடி படத்தில் வரும் லவ் பண்ணலாமா வேணாமா பாடலை பகிர்ந்து, வாழ்த்து கூறி இருந்தது. இந்த பதிவை ரீட்வீட் செய்த விக்னேஷ் சிவன், ஹேப்பி பர்த்டே சிலம்பரசன் சார். இந்த ஆண்டு உங்களுக்கு அற்புதமான, சந்தோஷமான, வெற்றிகரமான ஆண்டாக இருக்கும் என நம்புகிறேன். #Atman stay blessed என குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு படம் பண்ணுவீங்களா

இன்னொரு படம் பண்ணுவீங்களா

விக்னேஷ் சிவனின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், உண்மையிலேயே சூப்பரான வாழ்த்து. அந்த மனசு தான் சார் கடவுள். போடா போடி 2 வருமா. இன்னொரு படம் சிம்பு கூட பண்ணுவீங்களா. ஒரு படம் பண்ணினதுக்கே மொத்தமும் போச்சுன்னு புலம்பிட்டு இருக்கார் மனுஷன். உங்க காம்போவில் மற்றொரு படத்தை எதிர்பார்க்கிறோம். தங்கம் சார் நீங்க. அவரோட தங்கத்தை தூக்கிட்டு போய்டுவாறோன்னு தான் அவருக்கு பயம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X