Don't Miss!
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
மருமகன்னா இவருதான்.. மாமியாருக்கு பிறந்தநாள்.. நள்ளிரவில் வாழ்த்து சொல்லி சர்ப்ரைஸ் கொடுத்த விக்கி!
சென்னை: தனது வருங்கால மாமியாரான நயன்தாராவின் தாயார் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
இருவரும் லிவிங் டு கேதரில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
கொரோனா பாதிப்பு.. சிகிச்சை பெற்று வந்த நடிகர் புளோரன்ட் பெரேரா திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்!
இப்போது இல்லை
இருவரும் இந்தாண்டுக்குள் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதனை மறுத்த விக்னேஷ் சிவன், சினிமாவில் சாதிக்க வேண்டியது அதிகம் உள்ளது அதன் பிறகுதான் திருமணம் என கூறினார்.
நீச்சல் குளம்
இந்நிலையில் இருவரும் கோவாவில் ஓய்வை கழித்து வருகின்றனர். கோவாவில் உள்ள பிரைவேட் ஹவுஸ் ஒன்றில் இருவரும் தனிமையில் கொண்டாடி வருகின்றனர். நேற்று நயன்தாரா நீச்சல் குளத்தின் அருகில் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்தார் விக்னேஷ் சிவன்.
நைட்டியில் நயன்
அதனை தொடர்ந்து அங்குள்ள தோட்டத்தில் நயன்தாரா நைட்டியில் பூப்பறிக்கும் போட்டோக்கள் வெளியானது. விக்னேஷ் சிவன் எடுத்த அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அதனை பார்த்த நெட்டிசன்கள், விக்கி ரசிச்சு ரசிச்சு எடுத்திருக்கிறார் என பாராட்டினர்.
வருங்கால மாமியாருக்கு வாழ்த்து
இந்நிலையில் விக்னேஷ் சிவன் மேலும் ஒரு போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதாவது நடிகை நயன்தாராவின் தாயாருக்கு இன்று பிறந்த நாள். இதனை முன்னிட்டு தனது வருங்கால மாமியாரான அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
மை டியரஸ்ட் அம்மு
ஹேப்பி பர்த்டே மை டியரஸ்ட் அம்மு மிஸ்ஸஸ் குரியன் என கேக் கட் பண்ணும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்களும் நயன்தாராவின் அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இன்னைக்கு இதான்
விக்கி ஷேர் செய்துள்ள போட்டோவின் குவாலிட்டி குறைவாக உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன தல போட்டோ குவாலிட்டியே இல்ல நான் வேணும்னா அனுப்பி வைக்கவா என கேட்டுள்ளனர். இன்னும் சிலர் இன்னைக்கு இந்த போஸ்ட்தான் வைரல் ஆக போகுது என கூறியுள்ளனர்.