twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொலையுதிர் காலம்: நயனுக்காக அந்தர் பல்டி அடித்த விக்னேஷ் சிவன்

    By Siva
    |

    Recommended Video

    தலைப்பை வைத்து தடை விதித்த ஹைகோர்ட்

    சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள அறிக்கையை பார்த்தவர்கள் அவர் அந்தர் பல்டி அடித்துள்ளதாக கூறுகிறார்கள்.

    சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படம் வரும் 14ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    Vignesh Shivan wishes Kolaiyuthir Kaalam team ahead of release

    இந்நிலையில் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    கொலையுதிர் காலம் படத்தின் ரிலீஸுக்கு வாழ்த்துக்கள். படத்தை பார்த்தேன். ரசிகர்கள் பார்த்து ரசிக்கும்படியான த்ரில்லராக வந்துள்ளது. இது த்ரில்லர் சீசன் என்பதால் இந்த படம் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும். நயன்தாரா மற்றும் பிறர் திறம்பட நடித்துள்ளனர். சக்ரி தலைமையிலான குழு நல்ல படத்தை கொண்டு வந்துள்ளது.

    ஒரு படத்தின் மீது தயாரிப்பாளர் ஒருவர் இந்த அளவுக்கு அக்கறை காட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தை ரிலீஸ் செய்ய மதியழகன் எடுத்துக் கொண்ட முயற்சி நல்ல கதை மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. தனிப்பட்ட முறையில் எங்களுக்கு இடையே சில கசப்பான தருணங்கள் ஏற்பட்டது. அவை தேவையில்லாதது மற்றும் துரதிர்ஷ்டவசமானது என்று நினைக்கிறேன். இருப்பினும் இறுதியில் அனைத்தும் பேச்சுவார்த்தை மூலம் தீர்ந்துவிட்டது.

    நாம் அனைவரும் ஒரே துறையில் வேலை செய்கிறோம். அதனால் எப்பொழுதும் நல்ல முறையில் நடந்து கொண்டு பாசிட்டிவிட்டியை பரப்புவது நல்லது. கொலையுதிர்காலம் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன். குறிப்பாக மதியின் உறுதிக்காக.. ரசிகர்கள் இந்த படத்தை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கொலையுதிர் காலம் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ராதாரவி நயன்தாராவை விமர்சித்ததை கண்டித்து தொடர்ந்து ட்வீட் செய்த விக்னேஷ் சிவன் முடிக்கப்படாத படத்திற்கு விழாவா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் அவரின் அறிக்கையை பார்த்தவர்கள் விக்கி அந்தர் பல்டி அடித்துவிட்டதாக கூறுகிறார்கள்.

    இதற்கிடையே கொலையுதிர் காலம் என்ற தலைப்பு தன்னுடையது என்று கூறி பாலாஜி குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தனது மனுவில் கூறியதாவது,

    மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர்காலம் நாவலின் உரிமையை நான் வாங்கினேன். அந்த உரிமை என் மனைவியிடம் தற்போது உள்ளது. அப்படி இருக்கும்போது சக்ரி டோலட்டி அந்த தலைப்பை அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளார். எனவே, இந்த படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

    அவரின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கொலையுதிர் காலம் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Director Vignesh Shivan has wished his girlfriend Nayanthara's movie Kolaiyuthir Kaalam a grand success.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X