வாழ்க்கைக்கு அர்த்தத்தை கொடுத்துருக்காங்க... நயன்தாராவுக்கு வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்!

சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர்.

இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார்.

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா தமிழில் லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் போற்றப்படுபவர். தொடர்ந்து ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். 10 ஆண்டுகளை கடந்தும் இவர் தமிழில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அந்த இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார்.

 காதலில் நயன்தாரா

காதலில் நயன்தாரா

நானும் ரவுடி தான் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார் நன்தாரா அப்போது இவருக்கும் அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது. தொடர்ந்து நான்கைந்து ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருகின்றனர். அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அந்த புகைப்படங்களை பகிர்ந்தும் வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் பதிவுகள்

விக்னேஷ் சிவன் பதிவுகள்

இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவன் பதிவு செய்யும் இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளுகிறது. புத்தாண்டு கொண்டாட்டம் உள்ளிட்ட பல நிகழ்வுகளின் புகைப்படங்கள் இவ்வாறு பகிரப்பட்டு வருகிறது. சமீபத்தில் தங்களது புதிய காரின் பூஜைக்காக பாடிகாட் முனீஸ்வரன் கோயிலுக்கு இருவரும் சென்ற புகைப்படங்களும் லைக்ஸ்களை அள்ளியது.

விக்னேஷ் சிவன் வாழ்த்து

விக்னேஷ் சிவன் வாழ்த்து

இந்நிலையில் இன்றைய தினம் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி விக்னேஷ் சிவன் பரவலான பெண்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நயன்தாரா புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். பெண்கள் ஆண்களை உருவாக்குவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர்களால் மட்டுமே ஆண்களின் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைப்பதாகவும் பாராட்டியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் பெண்களுக்கானது

ஒவ்வொரு நாளும் பெண்களுக்கானது

இன்று மட்டுமல்ல, ஒவ்வொரு நாளுமே பெண்களுக்கானது என்றும் குறிப்பிட்டுள்ளார். வார்த்தைகளால் கூறுவதை காட்டிலும் அவர்களின் இருப்பை அழகாக்குவோம் என்றும் தெரிவித்துள்ளார். அனைத்து வலிமையான, அழகான அதிசயத்தக்க பெண்களுக்கும் தனது பெண்கள் தின வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

நயன்தாராவிற்கு வாழ்த்து

நயன்தாராவிற்கு வாழ்த்து

நயன்தாராவிற்கும் அவர் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவில் அவர் பகிர்ந்துள்ள நயன்தாராவின் புகைப்படங்கள் அனைத்து அழகு அள்ளுகிறது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X