யோகி பாபுவின் காதலிக்காக பாடல் எழுதிய விக்னேஷ் சிவன்
Recommended Video

சென்னை: காதலி நயன்தாராவுக்காக ஒரு பாடலை எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன்.
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் போதைப் பொருள் விற்கும் நயன்தாராவை விரட்டி விரட்டி காதலிக்கிறார் யோகி பாபு.
யோகி பாபுவின் ரவுசை பார்த்து நமக்கும் ஒரு பொண்ணு கிடைக்கும் என்று சிங்கிள்ஸுக்கு நம்பிக்கை வந்துள்ளது.
விக்னேஷ் சிவன்
கோலமாவு கோகிலா படத்திற்காக ஒரேயொரு என்ற பாடலை எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன். அந்த பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் என்று படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

30 பாட்டு
ஒரேயொரு பாடலுடன் சேர்த்து விக்னேஷ் சிவன் இதுவரை 30 பாடல்கள் எழுதியுள்ளார். இதில் ஸ்பெஷல் என்னவென்றால் நயன்தாராவை காதலிக்கும் யோகி பாபுவை பார்த்து காண்டாகிவிட்டு பாட்டு எழுதிக் கொடுத்துள்ளார்.

வெயிட்டிங்
ஒரேயொரு பாடலை கேட்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அதைவிட அந்த பாடல் வீடியோவை பார்க்கும் ஆவல் அதிகமாக உள்ளது. இந்த வீடியோவிலும் யோகி பாபு வருவாரா, நயன்தாராவிடம் காதல் சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்
காதலியின் படத்திற்கு பாடல் எழுதியதுடன் அதை நன்றாக விளம்பரமும் செய்து வருகிறார் விக்னேஷ் சிவன். இந்த ஆண்டே அவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











