ஒரே கையில் உயிரும், உலகமும்.. நீங்கள் என்ன கலாய்க்கிறது?.. விக்னேஷ் சிவன் போட்ட செம போஸ்ட்
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் இப்போது எல்ஐகே படத்தை இயக்கியிருக்கிறார். இப்படமானது செப்டம்பர் 18ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
சிம்பு நடித்த போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து விஜய் சேதுபதி ஒத்துக்கொள்ள நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ்.
நயன்தாராவுடன் திருமணம்: இந்தப் படத்தில் நடித்தபோதுதான் விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினர். பல வருடங்கள் லிவிங் டுகெதரில் இருந்தவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளையும் வாடை தாய் மூலம் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் வாடகை தாய் விவகாரத்தில் இருவரும் எந்த விதிமீறலையும் செய்யவில்லை என்பது அரசு சார்பில் நடந்த விசாரணையில் தெரியவந்தது.

எல்ஐகே: அஜித்தின் 62ஆவது படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் அதிலிருந்து வெளியேறி; இப்போது எல்ஐகே என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, சீமான், எஸ்.ஜே.சூர்யா என பலர் நடித்திருக்கிறார்கள். செப்டம்பர் 18ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. விக்கி ஒரு ஹிட் கொடுத்து பல வருடங்கள் ஆவதால் இந்தப் படத்தை ரொம்பவே நம்பியிருக்கிறார்.
கலாய்த்த ரசிகர்கள்: இதற்கிடையே விக்னேஷ் சிவன் - நயன்தாராவை சுற்றி சமீப காலமாக பிரச்னைகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. இரண்டு பேரும் அதனை பக்குவமாக கையாண்டுவருகிறார்கள். பிரச்னைகள் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் அவர்களை கடுமையாக ட்ரோல் செய்யவும் ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள். தனது மகன் உயிருடன் விஜய்யை விக்னேஷ் சந்தித்த புகைப்படங்களை வைத்து கலாய்த்த ரசிகர்கள்; சமீபத்தில் பழனியில் இருக்கும் முருகன் கோயிலுக்கு குடும்பத்தோடு சென்றார்.
செம ட்ரோல்: அப்போது அவர்கள் தனியாக இரும்பு கம்பிகளுக்குள் அமர வைக்கப்பட்டனர். அதனை கவனித்த மற்ற பக்தர்கள் கம்பிகளுக்கு வெளியே நின்று அவர்களை பார்க்கும்படியான புகைப்படங்களும் வெளியாகின. அதனையும் விடாத ரசிகர்கள், என்னது இது Zooல் பார்ப்பது போல் பார்க்கிறார்கள் என எல்லை மீறி கமெண்ட்ஸ் அடித்தார்கள். இந்நிலையில் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
என்ன போஸ்ட்: அதாவது தன்னையும், தனது மகன்களின் பெயரையும் வைத்து கிண்டல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், உயிர் மற்றும் உலக்கை கைகளில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் விக்னேஷ், 'ஒரே கையில் உயிரையும் பிடித்துக்கொண்டு உலகத்தையும் பிடித்துக்கொண்டு சிரித்துக்கொண்டு இருக்கும் விக்னேஷ் சிவன்' என கேப்ஷன் போட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களோ, 'என்ன விக்னேஷ் சிவனை அவரே கலாய்த்துக்கொள்கிறார்' என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











