விக்னேஷ் சிவனுக்கு இது சோதனை காலம்?.. LIC படமும் ட்ராப்பாகிவிட்டதா?.. பரபர தகவல்
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் இப்போது எல்ஐசி என்ற படத்தை இயக்கிவருகிறார். லலித் படத்தை தயாரிக்க இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருவதாக தகவல் வெளியான சூழலில் இப்போது படம் பற்றி வேறு விதமாக பேசப்படுகிறது.
சிம்பு நடித்த போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து விஜய் சேதுபதி ஒத்துக்கொள்ள நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ்.

நயன்தாராவுடன் திருமணம்: இந்தப் படத்தில் நடித்தபோதுதான் விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினர். பல வருடங்கள் லிவிங் டுகெதரில் இருந்தவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளையும் வாடகை தாய் மூலம் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் வாடகை தாய் விவகாரத்தில் இருவரும் எந்த விதிமீறலையும் செய்யவில்லை என்பது அரசு சார்பில் நடந்த விசாரணையில் தெரியவந்தது.
எல்.ஐ.சி: அஜித்தின் 62ஆவது படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் அதிலிருந்து வெளியேறி; இப்போது எல்ஐசி என்ற படத்தை இயக்கிவருகிறார். லலித் படத்தை தயாரிக்க இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
விறுவிறு ஷூட்டிங்: இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். ஏனெனில் முதலில் அவர் அஜித்தின் 62ஆவது படத்தை இயக்குவதாக இருந்து அதிலிருந்து வெளியேறியதை அடுத்து; விக்னேஷின் சினிமா வாழ்க்கை அழியும் அபாயத்தில் இருக்கிறது என்று பலரும் பேசினார்கள். எனவே இந்தப் படத்தை வெற்றிப் படமாக கொடுத்து தன்னை பற்றி பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைப்பில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
படம் ட்ராப்?: இந்நிலையில் எல்ஐசி படம் குறித்து புத்ய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அந்தப் படத்தை தயாரிப்பு நிறுவனம் ட்ராப் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. லியோ படத்தை தயாரித்த லலித்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல் பரபரப்பாக பரவும் அதேநேரத்தில், படம் ட்ராப் ஆகவில்லை; கொஞ்சம் பிரேக் எடுத்திருகிறார்கள்.. விரைவில் பட பணிகள் ஆரம்பிக்கும் என்றும் மற்றொரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











