விக்னேஷ் சிவன் இயக்கும் LIK.. நாளை வெளியாகும் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. காரணம் தெரியுமா?
சென்னை: விக்னேஷ் சிவன் கோலிவுட்டின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர். இயக்குநராக மட்டுமின்றி பாடலாசிரியராகவும் தனது தடத்தை ஆழமாகவே பதித்திருக்கிறார். அவர் நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர் இப்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்த சூழலில் படம் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது.
சினிமாவில் தனக்கென இடம் பிடிப்பதற்கு நீண்ட காலம் காத்திருந்தவர் விக்னேஷ் சிவன். கடந்த ஆம் ஆண்டு சிம்புவை வைத்து போடா போடி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் அவர். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் துப்பாக்கி படத்துக்கு போட்டியாக களமிறங்கியதன் காரணமாக பெரிதாக கொண்டாடப்படவில்லை. ஆனாலும் 27 வயது இளைஞர் படம் இயக்கியதுபோல் இல்லாமல் ஒரு அனுபவசாலியின் மேக்கிங் அந்தப் படத்தில் புலப்பட்டது.

நானும் ரௌடிதான்: போடா போடி படத்துக்கு பிறகு நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் மெகா ஹிட்டானது. மேலும் ரவுடி ஜானரில் உருவான கதையில் திகட்டாத காமெடியை வைத்து அனைவரது வயிறுகளையும் பதம் பார்த்து தனக்கென தனி இடத்தை பிடித்தார். அதற்கு பிறகு அவர் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றது.
நயன்தாராவுடன் திருமணம்: இந்தப் படத்தில் நடித்தபோதுதான் விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினர். பல வருடங்கள் லிவிங் டுகெதரில் இருந்தவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளையும் வாடகை தாய் மூலம் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் வாடகை தாய் விவகாரத்தில் இருவரும் எந்த விதிமீறலையும் செய்யவில்லை என்பது அரசு சார்பில் நடந்த விசாரணையில் தெரியவந்தது.
எல்.ஐ.கே: அஜித்தின் 62ஆவது படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் அதிலிருந்து வெளியேறி; இப்போது எல்ஐகே என்ற படத்தை இயக்கிவருகிறார். லலித் படத்தை தயாரிக்க இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
விறுவிறு ஷூட்டிங்: இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். ஏனெனில் முதலில் அவர் அஜித்தின் 62ஆவது படத்தை இயக்குவதாக இருந்து அதிலிருந்து வெளியேறியதை அடுத்து; விக்னேஷின் சினிமா வாழ்க்கை அழியும் அபாயத்தில் இருக்கிறது என்று பலரும் பேசினார்கள். எனவே இந்தப் படத்தை வெற்றிப் படமாக கொடுத்து தன்னை பற்றி பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைப்பில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
நாளை ஃபர்ஸ்ட் சிங்கிள்: படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் படம் பற்றிய அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதன்படி நாளை அனிருத்தின் பிறந்தநாள் ஆகும். எனவே அதனையொட்டி LIK படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்துக்கு முதலில் எல் ஐ சி என்றுதான் பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் பெயரை வேறொருவர் ஏற்கனவே பதிவு செய்திருந்ததால் படத்துகு எல் ஐ கே என்று பெயர் மாறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











