விக்னேஷ் சிவன், நயன்தாரா.. சைலன்டா திருமணத்திற்கு ஏற்பாடு.. விரைவில் டும் டும் !
சென்னை : விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சைலன்டா திருமணத்திற்கான வேலையில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
பலமுறை திருமணம் என தகவல்கள் பரவினாலும், இந்த முறை கன்ஃபார்மாக திருமணம் நடந்துவிடும் என கூறப்படுகிறது.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் ரசிகர்கள் நட்சத்திர ஜோடிகளின் திருமண தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

விக்னேஷ் சிவன்
இயக்குநர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்பு நடித்த போடா போடி திரைப்படத்தை இயக்கி இயக்குநராக தனது அறிமுகத்தை கொடுத்தார். அந்த படத்திற்கு பிறகு, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், ஒடிடியில் வெளியான பாவக்கதைகள் ஆந்தாலஜி திரைப்படத்தில் லவ் பண்ணா உட்ரணும் என்ற செக்மெண்டை இயக்கி இருந்தார்.

காதல் மலர்ந்தது
நானும் ரவுடி தான் படத்தை இயக்கிய போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் இணைந்தே செல்கின்றனர். அது மட்டும் இல்லாமல் கோயில்களுக்கு ஒன்றாகச் சென்று வருவதை வழக்கமாக்கி உள்ளனர்.

விரைவில் டும் டும்
கடந்த ஆண்டே இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக நெற்றிக்கண் பட ப்ரோமோஷனின் போது நயன்தாரா கூறியிருந்தார். இவர்களின் திருமண தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள். இதையடுத்து, வரும் ஜூன் மாதம் இவர்களின் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித்62 படத்திற்கு முன்பாக
அஜித் குமாரின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் நிலையில் அதற்கு முன்பாக திருமணத்தை முடித்துவிட இருவரும் பிளான் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று நயன்தாரா ஆசைப்படுகிறாராம். இதனால், இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காத்துவாக்குல ரெண்டு காதல்
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா, சமந்தா இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர். முக்கோண காதல் கதையான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது.


Click it and Unblock the Notifications











