பேய் படத்திற்கு நடிகை நயன்தாராவின் பெயரா.. செம காண்டில் இருக்கும் விக்னேஷ் சிவன்?

சென்னை: பேய் படம் ஒன்றிற்கு நடிகை நயன்தாரா கதாப்பாத்திரத்தின் பெயரை வைத்திருப்பது இயக்குநர் விக்னேஷ் சிவனை கோபமடைய செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Nayanthara & Ramya Krishanan lose Crores of rupees

கடந்த 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான படம் நானும் ரவுடி தான். இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி லீடிங் ரோலில் நடித்தனர்.

மேலும் ராதிகா, பார்த்திபன், ஆர்ஜே பாலாஜி, ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

பேய் படம்

பேய் படம்

இந்தப் படத்தில் காதம்பரி என்ற கதாப்பாத்திரத்தில் காது கேளாத பெண்ணாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நடிகை நயன்தாரா. இதற்காக நயன்தாராவின் நடிப்பை பலரும் பாராட்டினர். இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகை நயன்தாராவின் கதாப்பாத்திரப் பெயரான காதம்பரி என்ற பெயர் பேய் படம் ஒன்றிற்கு வைக்கப்பட்டுள்ளது.

புது முகங்கள்

புது முகங்கள்

அதாவது அறிமுக இயக்குனர் அருள் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள இப்படத்திற்கு காதம்பரி என தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் கதாநாயகனாக அருள் மற்றும் கதாநாயகியாக காசிமா ரஃபி நடித்துள்ளார்கள். மேலும் பல புது முகங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

திகிலூட்டும் படம்

திகிலூட்டும் படம்

இந்நிலையில் காதம்பரி படத்தின் இயக்குநரான அருள் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் நானும் ரவுடி தான் படத்தில் இருந்து நயன்தாராவின் கதாப்பாத்திரத்தின் பெயரை வைத்திருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்தப் படம் ஒரு திகிலூட்டும் படமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

அந்தப் பெயரை வைத்ததால்

அந்தப் பெயரை வைத்ததால்

இதனிடையே இந்தப் படத்தின் டிரெய்லரை வெளியிடுமாறு இயக்குனர் விக்னேஷ் சிவனை இயக்குநர் அருள் அணுகியதாகவும் ஆனால் அவர் வெளியிட மறுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் காதம்பரி என்ற நயன்தாராவின் கதாப்பாத்திர பெயரை பேய் படத்திற்கு வைத்ததால்தான் விக்னேஷ் சிவன் கோபத்தில் ட்ரெயிலர் ரிலீஸ் பண்ண மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X