அரசு ஹோட்டலை விலைக்கு கேட்டேனா?.. மீம்ஸ்கள் எல்லாம் நன்றாக இருந்தன.. விக்னேஷ் சிவன் விளக்கம்
சென்னை: சிம்பு, வரலட்சுமி நடித்த போடா போடி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய நானும் ரௌடிதான் திரைப்படம் மெகா ஹிட்டடித்தது. அதன் காரணமாக கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார் அவர். ஆனால் தொடர்ந்து அவர் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய இரண்டு படங்களுமே தோல்வி படங்களாக அமைந்தன. இதற்கிடையே நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அவர்.
விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். சிம்புவும், வரலட்சுமியும் நடித்த போடா போடி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் ஓரளவு நன்றாக இருந்தாலும் துப்பாக்கி படத்துக்கு போட்டியாக களமிறங்கியதால் அப்படம் தோல்வி படமாக அமைந்தது. இருந்தாலும் படத்தின் மேக்கிங் நல்லபடியாக இருந்ததை பார்த்து முதல் பட இயக்குநர் போலவே தெரியவில்லை என்று ரசிகர்கள் ஓபனாக பேசினார்கள்.

நானும் ரௌடிதான்: அந்தப் படத்துக்கு பிறகு விக்னேஷ் சிவன் சில வருடங்கள் இயக்காமல் இருந்தார். பிறகு தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அந்தப் படத்தில் இருந்த காமெடி சீன்களும் சூப்பர் வரவேற்பை பெற்றன. அதன் காரணமாக விக்னேஷ் சிவன் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார்.அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய படங்கள் சரியாக போகவில்லை.
நயனுடன் திருமணம்: இப்போது அவர் LIK என்ற படத்தை இயக்கிவருகிறார். இதற்கிடையே நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் இரண்டு பேரும் லிவிங் டூ கெதரில் இருந்துவிட்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க சமீபமாக விக்னேஷ் சிவன் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
மூன்று நொடி வீடியோ: அந்தவகையில் நயன்தாரா பற்றிய ஆவணப் படத்தின் ட்ரெய்லரில் நானும் ரௌடிதான் ஃபுட்டேஜ் மூன்று நொடிகள் இருந்தன. அதனையடுத்து மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்ப; நயன் காட்டமான கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். விக்னேஷ் சிவனோ தனுஷை மறைமுகமாக தாக்கி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை போட்டிருந்தார். பிறகு அதை டெலிட்டும் செய்துவிட்டார். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் அவர் பற்றி இன்னொரு சர்ச்சையும் எழுந்தது.
விலைக்கு கேட்ட விக்கி?: அதாவது புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாகவும்; அதற்கு அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்தத் தகவல் வெளியானதிலிருந்து அவரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தார்கள். இந்நிலையில் அந்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார்.
விக்னேஷ் சிவன் விளக்கம்: இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஹோட்டலை நான் விலைக்கு கேட்டதாக பரவிவரும் செய்திக்கு விளக்கமளிக்க விரும்புகிறேன். எனது LIK படத்துக்காக புதுச்சேரி விமான நிலையத்தை பார்க்கவும், அங்கு ஷூட்டிங் நடத்த அனுமதி கேட்கவும்தான் சென்றேன். அப்போது மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதலமைச்சரையும், சுற்றுலாத் துறை அமைச்சரையும் பார்ப்பதற்காக சென்றேன். அந்த சமயத்தில் என்னுடன் வந்த மேனேஜர் உணவகத்தை விலைக்கு வாங்குவது குறித்து அமைச்சரிடம் பேசினார். அதை என்னுடன் இணைத்துவிட்டார்கள். இதுதொடர்பாக வெளியான மீம்ஸ்கள் அனைத்தும் நன்றாகவும், வேடிக்கையாகவும் இருந்தன. ஆனால் அதெல்லாம் தேவையற்றது"" என்றார்.


Click it and Unblock the Notifications











