»   »  சூர்யாவின் 35வது படம்... இயக்குநர் விக்னேஷ் சிவன்.. இசை அனிருத்... நாயகி நயன்தாரா?

சூர்யாவின் 35வது படம்... இயக்குநர் விக்னேஷ் சிவன்.. இசை அனிருத்... நாயகி நயன்தாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூர்யாவின் 35வது படம் குறித்த தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

சூர்யா அடுத்து கபாலி ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் என்றும், மருது முத்தையா இயக்கத்தில் நடிக்கிறார் என்றும் பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் அவரது 35வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vignesh Sivan to direct Surya's 35th movie?

இந்தப் படத்துக்கு இசை அனிருத் என்றும் கூறப்படுகிறது. அடுத்த முக்கியமான கேள்வி படத்தின் நாயகி யார் என்பதுதான்.

சந்தேகமென்ன நயன்தாராதான் என்கிறார்கள் கோடம்பாக்கத்து பட்சிகள். கடந்த சில தினங்களாகவே நயன்தாரா தயாரிக்க, விக்னேஷ் சிவன் இயக்க முக்கிய நடிகர் அதில் நாயகனாக நடிக்கப் போவதாக செய்திகள் உலா வந்து கொண்டிருந்தன. அந்த செய்தியின் இடம்பெற்ற முக்கிய நடிகர் இப்போது சூர்யா என்பது உறுதியாகியுள்ளது.

விரைவில் முழுமையான தகவல்கள் வெளிவரும் என எதிர்ப்பார்ப்போம்.

English summary
Sources say that actor Surya will sign for Nayanthara movie directed by Vignesh Sivan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil