மாமியாருக்கு மதர்ஸ்டே வாழ்த்து.. விளாசிய நெட்டிசன்.. விக்னேஷ் சிவன் ரியாக்ஷன பாருங்க!
சென்னை: அன்னையர் தினத்தில் மாமியாருக்கு வாழ்த்து சொன்னதற்காக விளாசிய நெட்டிசனுக்கு விக்னேஷ் சிவன கூலாக பதிலடி கொடுத்திருக்கிறார்.
Recommended Video
நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது ஊர் அறிந்தது. இருவரும் லிவிங் டூ கெதர் முறையில் வசித்து வருகின்றனர்.
இதனிடையே இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் அது நடிகை நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை பாதிக்கும என்பதற்காகவும் மறைப்பதாகவும் தகவல் வெளியானது.

மாமியாருக்கு வாழ்த்து
அதேநேரத்தில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு கடந்த நயன்தாராவுக்கும் தனது மாமியாருக்கும் இன்ஸ்டாவில் வாழ்த்து கூறியிருந்தார் விக்னேஷ் சிவன்.

நயனுக்கு வாழ்த்து
எதிர்காலத்தில் தன்னுடைய குழந்தைகளுக்கு தாயாகப் போகிற நயன்தாராவுக்கு அன்னையர் தின வாழ்த்துகள் என்று கூறியிருந்தார். அவரது அந்த பதிவு பெரும் வைரலானது. அதனை பார்த்த ரசிகர்கள் இது எப்போது நடந்தது என்று கேட்டு மரண பங்கம் செய்தனர்.

நல்ல வேலை செய்திருக்கிறீர்கள்
இதனை தொடர்ந்து தனது மாமியாரான நடிகை நயன்தாராவின் அம்மாவுக்கும் வாழ்த்து கூறியிருந்தார் விக்னேஷ் சிவன். அன்னயர் தின வாழ்த்துகள் மிஸர்ஸ் குரியன், இப்படி ஒரு அழகான குழந்தையை பெற்று வளர்த்து நல்ல வேலையை செய்திருக்கிறீர்கள். நாங்கள் உங்களை நேசிக்கிறோம். தேங்க் யூ அம்மு என்று பதிவிட்டிருந்தார்.

தரக்குறைவான வார்த்தை
இதனை பார்த்த நெட்டிசன்கள், என்ன தலைவா மாமியாரை கரெக்ட் செய்கிறீர்களா என கிண்டல் செய்தனர். சில நெட்டிசன்கள் உங்களின் அம்மாவுக்கு வாழ்த்து சொல்லுங்கள் என்றனர். சில நெட்டிசன்கள் திட்டிக்கூட தீர்த்தனர். அந்த வகையில் ஒரு நெட்டிசன் தரக்குறைவான வார்த்தையால் திட்டிஅம்மாவுக்கு வாழ்த்து சொல்லுமாறு கூறினார்.

கூலாக பதிலடி
இதனை பார்த்து கடுப்பான விக்னேஷ் சிவன், தனது கோபத்தை கூலாக வெளிக்காட்டியிருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, நான் வாழ்த்து சொல்லிட்டேன் புரோ. உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.. அவர் உன்னை போன்ற நல்ல குணம் படைத்த அன்பான மனிதரை பெற்றேடுத்திருக்கிறார். அவருக்கு கடவுளின் ஆசிர்வாதங்கள் என பதிவிட்டுள்ளார்.

வசவுகள் வைரல்
விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு கூறிய வாழ்த்து மட்டுமே அதிகம் பகிரப்பட்டு, பேசப்பட்ட நிலையில், தற்போது அவர் தனது மாமியாருக்கு சொன்ன வாழ்த்தும், அதற்காக வாங்கிய வசவுகளும் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











