நயன் சேலையில் இருப்பதுதான் பிடிக்கும்.. அவருக்கு கொடுத்த முதல் கிஃப்ட் இதுதான்.. மனம் திறந்த விக்கி!

சென்னை: நயன்தாராவுக்கு தான் அளித்த முதல் பரிசு குறித்து மனம் திறந்துள்ளார் அவரது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவன்.

Recommended Video

Nayan WEDS Vignesh கூடிய சீக்கிரம் டும் டும் டும் | Vignesh கொடுத்த கல்யாண Update

தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர் என்பது ஊரறிந்த விஷயம்.

இருவரும் திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒன்றாக வசித்து வருகின்றனர். விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் நேற்று இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

முதல் கிஃப்ட் என்ன?

முதல் கிஃப்ட் என்ன?

அப்போது ரசிகர்கள், காதலியான நயன்தாரா குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவை அனைத்திற்கும் விக்னேஷ் சிவன் பதிலளித்தார். அதன்படி ஒரு ரசிகர் நயன்தாராவுக்காக நீங்கள் கொடுத்த முதல் கிப்ட் என்ன? என்று கேட்டார். அதற்கு நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற தங்கமே... பாடல் என பதில் அளித்தார் விக்கி.

வெஸ்டர்னா, டிரெடிஷனலா?

வெஸ்டர்னா, டிரெடிஷனலா?

அடுத்தப்படியாக நயன்தாராவுக்கு எந்த லுக் பொருத்தமாக இருக்கும், வெஸ்டர்ன், டிரெடிஷனலா? உங்கள் விருப்பம் என்ன என்று கேட்டிருந்தார் ஒரு ரசிகர். அதற்கு பதில் கூறிய விக்கி நயன்தாரா புடவையில் இருப்பது ரொம்ப பிடிக்கும் என்று கூறியிருந்தார்.

நயன் அழகின் ரகசியம் என்ன?

நயன் அழகின் ரகசியம் என்ன?

மற்றொரு ரசிகர் நயன்தாரா அழகின் ரகசியம் என்ன? என்று கேட்டார். அதற்கு பதில் கூறிய விக்னேஷ் சிவன், பிரார்த்தனைகள் என ஒற்றை வார்த்தையில் பதில் கூறியுள்ளார்.

நயனுடன் சென்றால்

நயனுடன் சென்றால்

மேலும் ஒரு ரசிகர் நயன்தாராவுடன் உங்களது விருப்பமான இடம்? என்று கேட்க அதற்கு படு ரொமான்டிக்காக பதில் அளித்துள்ளார் விக்கி. அதாவது நயன்தாராவுடன் எங்கு சென்றாலும் அது உடனடியாக விருப்பமான இடமாகிவிடும் என கூறியுள்ளார்.

நயன் படத்தில் பிடித்தது?

நயன் படத்தில் பிடித்தது?

மற்றொரு ரசிகர் நயன்தாரா நடித்ததில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்டிருந்தார். அதற்கு நயன்தாரா நடித்ததில் ராஜா ராணி படம் தான் தனக்கு பிடிக்கும் என கூறியுள்ளார்.

பாத்திரம் கழுவுவார்

பாத்திரம் கழுவுவார்

மேலும் நயன்தாரா மற்றும் உங்களைப் பற்றிய சில ரகசியங்களை சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார் மற்றொரு ரசிகர். அதற்கு டின்னர் முடிந்ததும் வீட்டில் அனைத்து பாத்திரங்களையும் நயன்தாராவே கழுவுவார் என பதில் கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.

கண்டுபிடித்து விடுகிறார்

கண்டுபிடித்து விடுகிறார்

மற்றொரு ரசிகர் நயன்தாரா கூட நடிக்க நீங்கள் ஏன் முயற்சி செய்யவில்லை என கேட்டார். அதற்கு முயற்சி செய்கிறேன். ஆனால் அவர் கண்டுபிடித்து விடுகிறார் என பதில் அளித்துள்ளார். மேலும் நயன்தாரா சமைப்பதில் பிடித்தது கீ ரைஸ், சிக்கன் கறி என்றும் பதில் கூறியுள்ளார் விக்கி.

நயன்தாராவாக மாறிவிட்டால்

நயன்தாராவாக மாறிவிட்டால்

ஒரு நாள் திடீரென, நீங்கள் நயன்தாராவாக மாறிவிட்டால் என்ன செய்வீர்கள்? என்று ஒரு ரசிகர் கேட்க, ஷுட்டிங் போக வேண்டியதுதான் என கூலாக பதில் அளித்துள்ளார் விக்கி.

எப்படி ஃபீல் பண்றீங்க?

எப்படி ஃபீல் பண்றீங்க?

மற்றொரு ரசிகர் நயன்தாரா குறித்துதான் எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள், எப்படி ஃபீல் செய்கிறீர்கள் என கேட்க பெருமையா இருக்கு என்று கூறினார் விக்கி. நயன்தாரா குறித்த கேள்விகளுக்கு விக்னேஷ் சிவன் அளித்துள்ள பதில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X