காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அடுத்த அப்டேட் ரெடி... விக்னேஷ் சிவன்!

சென்னை : போடா போடி,நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை தொடர்ந்து வினேஷ் சிவன் இப்பொழுது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார்.

இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.

சென்ற ஆண்டு கோயம்புத்தூரில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அடுத்த அப்டேட் ரெடி என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

வசூலை அள்ளியது

வசூலை அள்ளியது

2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி படத்தை இயக்கிய இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான விக்னேஷ் சிவன் அதைத்தொடர்ந்து இயக்கிய நானும் ரவுடி தான் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா லீட் ரோலில் நடித்திருந்தனர். சாதாரண கதைக்களத்தை எடுத்து காமெடி கலந்து மிகவும் வித்தியாசமான முறையில் கொடுத்திருக்க ரசிகர்களால் கொண்டாடப்பட்டது பல மடங்கு வசூலையும் அள்ளியது.

சமந்தா

சமந்தா

இப்பொழுது மீண்டும் நானும் ரவுடி தான் கூட்டணி இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படம் தயாராகி வருகிறது. இந்த முறை விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து சமந்தாவும் நடித்து வருவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு பல மடங்கு உள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

அனிருத்தின் இசையில்

அனிருத்தின் இசையில்

கடந்த வருட இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது . படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவுடன் விக்னேஷ் சிவன் செல்லமாக சண்டைபோடும் க்யூட் வீடியோ வெளியாகி வைரலானது. வழக்கம்போல அனிருத்தின் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாடல் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.

ஜூலை மாதம்

ஜூலை மாதம்

இந்த நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அடுத்த பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில் கேட்டுள்ளார் அதற்கு விக்னேஷ் சிவன் ஜூலை மாதம் இரண்டாவது பாடல் வெளியாகும் என்ற மகிழ்ச்சியான செய்தியைக் கூறி இருக்க ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் வெயிட்டிங்கில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X