ஹேப்பி பர்த்டே கண்மணி தங்கமே... மை எல்லாமே... நயன்தாராவுக்கு அசத்தலாக வாழ்த்து சொன்ன காதலர் விக்கி!

சென்னை: நடிகை நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது காதலரான விக்னேஷ் சிவன் அசத்தலாக பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

Recommended Video

Vignesh Surprise-ல் கண்கலங்கிய Nayan | Samantha, Kala Master, Connect #HBDNayan

தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரசிகர்களால் செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.

தென்னிந்திய மொழிகளில் பிஸியாக உள்ள நயன்தாரா பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கும் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா.

கண்மணி தங்கமே.. மை எல்லாமே..

கண்மணி தங்கமே.. மை எல்லாமே..

இந்நிலையில் நடிகை நயன்தாரா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவரது காதலரான விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு சமூக வலைதள பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் போஸ்டரை ஷேர் செய்துள்ள நயன்தாரா, ஹேப்பி பர்த்டே கண்மணி தங்கமே.. மை எல்லாமே..

வலிமையான நபராக இருங்கள்

வலிமையான நபராக இருங்கள்

ஆசீர்வதிக்கப்பட்டவராக இருங்கள் மற்றும் நீங்கள் எப்போதும் அதே தனித்துவமான, அழகான, சக்திவாய்ந்த, வலிமையான நபராக இருங்கள்.. வெற்றி மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் மட்டுமே நிறைந்த வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.. கடவுளின் ஆசிர்வதிக்கட்டும் நயன்தாரா... என பதிவிட்டுள்ளார்.

ட்ரெண்டிங் ஹேஷ்டேக்

ட்ரெண்டிங் ஹேஷ்டேக்

இதனை பார்த்த ரசிகர்களும் நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் #HBDNayanthara என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா, காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கண்மணி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இருவருக்கும் இடையே காதல்

இருவருக்கும் இடையே காதல்

இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. நயன்தார விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

வட மாநில கோவில்கள்

வட மாநில கோவில்கள்

இருவரும் வெளிநாடுகளில் ஓய்வை கழிக்கும் போட்டோக்கள் அவ்வப்போது வெளியாகி வந்தது. கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு சென்றதாக தெரியவில்லை. இருப்பினும் சமீபத்தில் இருவரும் வட மாநில கோவில்களில் வழிபட்ட போட்டோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X