தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.. மகனை வைத்து விக்னேஷ் சிவன் கொடுத்த போஸ்
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் இப்போது எல்ஐசி என்ற படத்தை இயக்கிவருகிறார். லலித் படத்தை தயாரிக்க இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன.. இந்தச் சூழலில் தந்தையர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் கொடுத்த போஸ் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
சிம்பு நடித்த போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து விஜய் சேதுபதி ஒத்துக்கொள்ள நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ்.

நயன்தாராவுடன் திருமணம்: இந்தப் படத்தில் நடித்தபோதுதான் விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினர். பல வருடங்கள் லிவிங் டுகெதரில் இருந்தவர்கள் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளையும் வாடகை தாய் மூலம் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் வாடகை தாய் விவகாரத்தில் இருவரும் எந்த விதிமீறலையும் செய்யவில்லை என்பது அரசு சார்பில் நடந்த விசாரணையில் தெரியவந்தது.
எல்.ஐ.சி: அஜித்தின் 62ஆவது படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் அதிலிருந்து வெளியேறி; இப்போது எல்ஐசி என்ற படத்தை இயக்கிவருகிறார். லலித் படத்தை தயாரிக்க இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது.
மகன்கள் உயிர், உலக்: விக்னேஷ் சிவன் தனது மனைவி மற்றும் மகன்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார். எப்போதும் அவர்களை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் அவர்; அவர்கள் மீது தனக்கு பாசத்தை பறைசாற்றும்விதமாக அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ஏதேனும் ஒரு போஸ்ட்டையோ, புகைப்படத்தையோ தொடர்ந்து பகிர்ந்துவருவது வழக்கம். அந்தவகையில் இப்போதும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
பாகுபலி போஸ்: அதாவது நேற்று உலகம் முழுவது தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி நீச்சல் குளத்தில் மூழ்கியபடி தனது மகன்களில் ஒரு மகனை இரு கைகளால் தூக்கி பாகுபலி படத்தின் போஸை கொடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், வேற லெவல் போஸா இருக்கே.. விக்னேஷ் சிவன் சிறந்த தந்தை என்று ஒவ்வொரு நாளும் நிரூபித்துவருகிறார் என்று கமெண்ட்ஸ் செய்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











