Nayanthara - பெருமையா இருக்கு தங்கமே.. நயன் போஸ்டருக்கு விக்னேஷ் சிவன் ரியாக்‌ஷன்

சென்னை: Nayanthara (நயன்தாரா) ஜவான் படத்திலிருந்து வெளியான நயன்தாராவின் புது போஸ்டரை பகிர்ந்து விக்னேஷ் சிவன் செய்திருக்கும் ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

கோலிவுட்டின் முன்னணி இயக்குநரான அட்லீ தமிழில் நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். ஐந்தாவதாக ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை ஹிந்தியில் இயக்கியிருக்கிறார். இதில் ஷாருக்கானுடன் நயன்தாரா, தீபிகா படுகோனே, ப்ரியாமணி, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டோ நடித்திருக்கின்றனர். படமானது செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

Vignesh Sivans tweet sharing Nayantharas new poster from Jawan

எதிர்பார்ப்பில் ஜவான்: ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான பதான் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கைப்போடு போட்டது. இதனையடுத்து அவரது நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் ஜவான் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. குறிப்பாக அட்லீ முதன்முறையாக ஹிந்தியில் அறிமுகமாகியிருப்பதாலும்; அவரது மேக்கிங் அருமையாக இருக்கும் என்பதாலும் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

ஜவான் ட்ரெய்லர்: ஜவான் படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியானது. ஷாருக்கானின் வித்தியாசமான கெட்டப், நயன்தாராவின் அனல் பறக்க வைக்கும் ஆக்‌ஷன், விஜய் சேதுபதியின் மாஸ் இண்ட்ரோ என ட்ரெய்லர் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படம் பாலிவுட்டில் சாதனையை நிகழ்த்தும். இதற்கு பிறகு அட்லீக்கு ஹிந்தியில் பட வாய்ப்புகள் குவியலாம் என ஆரூடம் கூறிவருகின்றனர்.

நயன் போஸ்டர்: இந்தச் சூழலில் ஜவான் படத்திலிருந்து புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதில் நயன்தாரா கூலர்ஸ் அணிந்துகொண்டு கையில் துப்பாக்கியுடன் மாஸாக இருந்தார். அதனைப் பார்த்த பலரும் பில்லா படத்துக்கு பிறகு நயன் தாரா இதில் ஆக்‌ஷனில் பின்னி எடுத்திருப்பார். அதனைத்தான் இந்தப் போஸ்டர் உணர்த்துகிறது. லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கு தகுதியான போஸ்டராக அமைந்திருக்கிறது என மகிழ்ச்சியுடன் அதனை பகிர்ந்துவருகின்றனர்.

விக்னேஷ் சிவன் ரியாக்‌ஷன் இந்நிலையில் அந்தப் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் விக்னேஷ் சிவன், "தங்கமே நயன்தாரா மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இவ்வளவு பெரிய படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறாய். உனது பயணம் இப்போதுதான் தொடங்குகிறது. எனது அன்பான மனைவியே உன்னை நினைத்து நம் குடும்பம் பெருமைப்படுகிறது" என தெரிவித்திருக்கிறார். அவரது இந்த ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

ஷாருக்கான் ட்வீட்: முன்னதாக ஜவான் படத்தில் நயன் தாராவின் லுக் போஸ்டரை வெளியிட்டு நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், புயலுக்கு முன்பான அமைதி என ட்வீட் செய்திருந்தார். முதல் படத்திலேயே பாலிவுட் பாஷாவுடன் இணைந்திருப்பதால் அடுத்தடுத்து நயன்தாரா பாலிவுட்டில் தனது தடத்தை ஆழமாக பதிப்பார் என லேடி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X