airaa: நாம சொன்ன மாதிரியே ஆகிடுச்சு பாஸ்.. நயன் பத்தி விக்னேஷ்சிவன் போட்ட டிவீட்டைப் பார்த்தீங்களா?
ஐரா படத்தில் நயன்தாராவின் தோற்றம் பற்றி இயக்குனர் விக்னேஷ் சிவன் டிவீட் செய்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஐரா படப்பாடலில் நயன்தாராவின் தோற்றம் குறித்து அவரது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன் வேடிக்கையாக டிவீட் செய்துள்ளார்.
இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் படம் ஐரா. முதன்முறையாக இப்படத்தில் நயன் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். கலையரசன், யோகிபாபு, ஜே.பீ. மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகியது. கவிஞர் தாமரையின் வரிகளில் மேகதூதம் எனத் தொடங்கும் அந்த பாடலு
க்கு குரல் வடிவம் கொடுத்திருக்கிறார் பத்மபிரியா ராகவன். இந்த பாட்ல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உள்ளது.
படத்தில் நயனின் இந்தக் கதாபாத்திரப் பெயர் பவானி என்பதால், இதனை பவானி ஆந்தம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடல் காட்சிகள் கருப்பு வெள்ளையில் உள்ளது. அடையாளமே தெரியாத அளவிற்கு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார் நயன். கருமையான தோற்றத்தில், பெரிய பொட்டுடன், வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் சாதாரணப் புடவையில் எளிமையாகக் காணப்படுகிறார்.
நயன்தாராவின் இந்த தோற்றத்தை பார்த்ததும், "இது நயன்தாரான்னு சொன்னா, விக்னேஷ் சிவனே நம்பமாட்டார்" என்ற தலைப்பில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதை ஆமோதிக்கும் வகையில் விக்னேஷ் சிவன் ஒரு டிவீட் செய்துள்ளார்.
அதில் அவர், "ஐரா படத்தில் இருந்து அருமையான பாடல். கவிஞர் தாமரை தனது ஒவ்வொரு பாடலிலும் அசர வைக்கிறார். எப்படிப்பட்ட புத்திசாலி அவர். கேஜிஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சர்ஜுனுக்கு எனது வாழ்த்துக்கள். நயன்தாரா மாதிரியே இருக்கும் இந்த பெண்ணை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது", என தெரிவித்துள்ளார்.
ஆக, நாம் சொன்னதையே தான் விக்னேஷ் சிவனும் ஃபீல் செய்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.


Click it and Unblock the Notifications











