தலைவரோட ஜாலியா ஒரு படம் பண்ணனும்... விக்னேஷ் சிவனின் ஆசைய பாருங்க
சென்னை : டைரக்டர் விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இன்னும் 15 நாட்கள் மட்டுமே சூட்டிங் பாக்கியுள்ளது.
இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து ஜாலியான ஒரு படத்தை டைரக்ட் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

15 நாட்கள் சூட்டிங் பாக்கி
இயக்குநர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா கூட்டணியில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். கொரோனா தாக்கத்தால் இந்த படத்தின் சூட்டிங் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 15 நாட்கள் சூட்டிங் மட்டுமே பாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் பரபர
இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய விக்னேஷ் சிவன், தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன் என்று தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்திய கேள்வி -பதில் செஷனில் தான் சூப்பர்ஸ்டார் ரஜினியின் தாக்கத்தால்தான் திரைத்துறைக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.
Recommended Video

பிடித்த நடிகர் ரஜினி
மற்றொரு ரசிகரின் விக்னேஷ் சிவனுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கும் அவர் மீண்டும் ரஜினிகாந்த்தையே சுட்டிக் காட்டினார். இதனிடையே மற்றொரு ரசிகர், சூப்பர்ஸ்டாரை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் எந்த மாதிரியான படத்தை அவர் இயக்குவார் என்று கேள்வி எழுப்பினார்.

ரஜினியை இயக்க விக்னேஷ் ஆசை
அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், மகிழ்ச்சியான, ஜாலியான ஒரு எண்டர்டெயின்மெண்ட் படத்தை தான் இயக்குவேன் என்று தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் அடுத்த சிங்கிள் வரும் ஜூலையில் வெளியாக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











