தங்கமே.. காதலிக்கு எப்படி வாழ்த்து சொல்லியிருக்கார் பாருங்க விக்கி.. வைரலாகும் செலிபிரேஷன் பிக்ஸ்!

சென்னை: நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது காதலரான விக்னேஷ் சிவன் பதிவு செய்த வாழ்த்து செய்தி வைரலாகி வருகிறது.

Recommended Video

Nayanthara Family Surprise Birthday Party | Vignesh Shivan, Celebrity Wishes | Filmibeat Tamil

மலையாள நடிகையான நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.

அதிக சம்பளம்

அதிக சம்பளம்

இதன் மூலம் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக உயர்ந்தார் நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார்

லேடி சூப்பர் ஸ்டார்

லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவுக்கு ஆரம்பமான புதிதில் நடிகர் சிம்புவை காதலித்தார். கருத்து வேறுபாட்டால் சிம்புவை பிரிந்த நடிகை நயன்தாரா பின்னர் நடிகரும் இயக்குநருமான பிரபுதேவாவை காதலித்தார்,.

விக்கியுடன் காதல்

விக்கியுடன் காதல்

அந்தக் காதலும் முறிந்ததால் படங்களில் கவனம் செலுத்திய நயன், தன்னை வைத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனை தற்போது காதலித்து வருகிறார். இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர்.

கோவா டூர்

கோவா டூர்

கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டுக்குள் முடங்கியிருந்த நயனும் விக்கியும் ரிலாக்ஸேஷன் அறிவித்த பிறகு, கோவாவில் ஓய்வை கழித்தனர். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

அதகளப்படுத்திய நயன்

அதகளப்படுத்திய நயன்

அப்போது விக்கியின் பிறந்தநாள் வர, கேக், மியூஸிக், பார்ட்டி என அதகளப்படுத்தினார் நயன்தாரா. அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு நன்றி கூறினார் விக்னேஷ் சிவன்.

விக்கி வாழ்த்து

விக்கி வாழ்த்து

இந்நிலையில் நேற்று நயன்தாரா தனது 36வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் காமன் டிபியை வெளியிட்டார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் நயன்தாராவுக்கு நடிகர் விக்னேஷ் சிவன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை பதிவிட்டார்.

தங்கமே..

தங்கமே..

அதில் பிறந்த நாள் வாழ்த்துகள் டூ யூ தங்கமே என பதிவிட்டுள்ளார் விக்கி. மேலும் நயன்தாராவின் சில க்யூட்டான போட்டோக்களையும் ஷேர் செய்தார் விக்கி. விக்கியின் இந்த பதிவை இதுவரை மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

கறுப்பு நிற உடையில்

கறுப்பு நிற உடையில்

இந்நிலையில் நடிகை நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் விக்னேஷ் சிவன். அதில் கறுப்பு நிற உடையில் ஃபிரி ஹேர் விட்டப்படி செம க்யூட்டாக உள்ளார் நயன்தார்.

லவ்லி சர்ப்ரைஸ்

லவ்லி சர்ப்ரைஸ்

வகை வகையான கேக்குகள் டேபிளில் அலங்கரிக்கப்பட்டிருக்க, ஹேப்பி பர்த்டே மோல் என்று கேக்குகளிலும் பின்னால் உள்ள அலங்கார திரையிலும் வண்ண பலூன்களால் எழுதப்பட்டுள்ளது. இந்த போட்டோக்களை ஷேர் செய்துள்ள விக்கி, எவ்ளோ ஸ்வீட்.. அம்மா அப்பா ஸ்வீட் புரோவான லெனு குரியனிடமிருந்து லவ்லி சர்ப்ரைஸ்.. என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X