“நீங்க வரணும்.. பழைய பன்னீர்செல்வமா வரணும்”.. விஜயகாந்தை வாழ்த்தும் தல ரசிகர்கள்…!
விஜயகாந்துக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து கூறியுள்ளனர்
சென்னை: உடல்நலம் பெற்று கம்பீரமாக அரசியலுக்கு வர வேண்டுமென்று அஜித் ரசிகர்கள் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சினிமாவில் மட்டுமே நடிக்கத் தெரிந்த மனிதன், மக்கள் துயரப்படுவதைப் பார்த்து துடித்துப்போகும் மனம் என விஜயகாந்தை புகழ்பவர்கள் ஏராளம்.

இன்று 66வது பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் விஜயகாந்த் உடல் நலம் பெற்று மீண்டும் அரசியலில் துடிப்புடன் செயல்பட வேண்டுமென்று விஜயகாந்த் ரசிகர்களைப் போல அஜித் ரசிகர்களும் ஆசைப்படுகின்றனர்.
சத்ரியன் திரைப்படத்தில் சிறையிலிருந்து விடுதலையான பிறகு விஜயகாந்த் வீட்டிற்கு வந்து ஏசி.பன்னீர்செல்வமா வரனும். உங்களுக்காக காத்துகிட்டு இருப்பேன் ஏசி சார் என திலகர் சாவால் விட்டுப்போகும் காட்சியைப் பகிர்ந்து, நீங்கள் மீண்டும் நல்ல அரசியல்வாதியாக எங்களுக்கு வேண்டும் என ட்வீட் செய்துள்ளனர்.
மிகச்சிறந்த மனிதர், அன்பானவர், அவரை மீண்டும் நல்ல நிலையில் பார்க்க காத்திருக்கிறோம் என ரஜினிகாந்த் ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.
முதல்வர் என்றால் இவரைப்போலத்தான் இருக்க வேண்டுமென்று பேசிய சமூகத்தை, எதிர்கட்சி தலைவர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று தனது செயல்கள் மூலம் எதிர்கட்சி தலைவர் பற்றி பேசவைத்ததுதான் கேப்டனின் அரசியல் வெற்றி என விஜய் பிறந்தநாள் வாழ்த்துக்கூறியுள்ளார்.
இதேபோல் சூர்யா, கார்த்தி, சிம்பு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் என பலரும் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











