»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நிதிக்காக நடிகர் விஜய், சென்னை நகரசாலைகளில் உண்டியலுடன் சென்று நிதி வசூல் செய்தார்.

குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்காக ஒவ்வொருவரும், ஒரு விதத்தில் தங்களது பங்கை செலுத்தி வருகின்றனர்.திரைக் கலைஞர்களும் இதில் விதி விலக்கல்ல.

நடிகர் விஜய் சென்னையில் உண்டியலுடன் சென்று பொதுமக்களிடம் நிதி வசூலித்து வருகிறார். திங்கள்கிழமைஇதைத் துவக்கிய அவர் முதலில் புரசைவாக்கம் பகுதியில் உண்டியல் வசூலில் இறங்கினார். அவருக்கு நல்லவரவேற்பும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை தி.நகர் பகுதியில் உள்ள நகைக் கடைக்காரர்கள், ஜவுளிக் கடைக்காரர்களிடம் சென்று நிதிவசூலித்தார். கோவைக்கும் சென்று நிதி வசூலிக்கத் திட்டமிட்டுள்ளார் விஜய்.

உண்டியல் மூலம் வசூலாகும் பணத்தை முதல்வர் கருணாநிதியிடம் கொண்டு சேர்க்கவும் திட்டமிட்டுள்ளார் விஜய்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil