விஜய் 58 படத்தின் பட்ஜெட் ரூ.75 + கோடி?
சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ரூ. 75க்கும் மேற்பட்ட கோடி செலவில் எடுக்கப்படும் என்று நடிகர் சுதீப் தெரிவித்துள்ளார்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் சுதீப், ஸ்ரீதேவி, ஸ்ருதி ஹான், ஹன்சிகா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்தில் ஹன்சிகா இளவரசியாக வருகிறாராம். அவருக்கு அம்மாவாக ஸ்ரீதேவி நடிக்கிறார். இந்த படம் மூலம் ஸ்ருதி முதன்முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்கிறார்.
விஜய் 58 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ரூ. 75 கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கப்படுகிறது என்று சுதீப் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்காக ஈ.சி.ஆர். அருகே போடப்பட்டுள்ள பிரமாண்ட அரண்மனை செட்டில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா நடிக்கும் காட்சிகள் அடுத்த வாரம் படமாக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.
கத்தி படத்தை போலவே இந்த படத்திலும் விஜய் 2 கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











