twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாகுபலி, கபாலியை அடுத்து கேரளாவில் பெரிய்ய விலைக்கு போன 'விஜய் 60'

    By Siva
    |

    சென்னை: விஜய்யின் விஜய் 60 படத்தின் கேரளா தியேட்டர்கள் வெளியீட்டு உரிமை ரூ. 6.25 கோடிக்கு போயுள்ளது.

    தெறி படத்தை அடுத்து விஜய் பரதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு 75 சதவீதம் முடிந்துள்ள நிலையில் இன்னும் படத்திற்கு பெயர் வைக்கவில்லை. தற்போதைக்கு விஜய் 60 என்று கூறுகிறார்கள்.

    படத்தை பெங்கல் விருந்தாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    கேரளா

    கேரளா

    விஜய் 60 படத்தின் கேரளா தியேட்டர்கள் வெளியீட்டு உரிமையை ஐஎப்ஏஆர் என்ற நிறுவனம் ரூ.6.25 கோடிக்கு வாங்கியுள்ளது. கேரளாவில் முதல் முறையாக விஜய்யின் படம் இவ்வளவு பெரிய தொகைக்கு விலை போயுள்ளது.

    கபாலி

    கபாலி

    முன்னதாக ரஜினிகாந்தின் கபாலி படத்தின் கேரளா தியேட்டர்கள் வெளியீட்டு உரிமை ரூ.7.5 கோடிக்கும், பாகுபலி 2 படத்தின் உரிமை ரூ. 10.5 கோடிக்கும் போனது. விஜய்யின் தெறி படத்தின் கேரளா தியேட்டர்கள் வெளியீட்டு உரிமை ரூ.5.6 கோடிக்கு விலை போனது.

    விஜய்

    விஜய்

    கேரளாவில் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அதிலும் முதல் நாள் முதல் காட்சியை காண தமிழகத்தில் எத்தனை அமர்க்களம் உள்ளதோ அதே போன்று தான் கேரளாவிலும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கிராமமே

    கிராமமே

    கேரளாவில் உள்ள அட்டப்பாடி கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு விஜய் பற்றி மட்டும் தெரிந்துள்ளது என்று பாலக்காடு துணை கலெக்டர் உமேஷ் கேசவன் தெரிவித்திருந்தார்.

    English summary
    Kerala theatrical release rights of Vijay 60 has been sold for Rs. 6.25 crores to a firm called IFAR.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X