விஜய் 60: 'தனி ஒருவன்' அரவிந்த் சாமி பாணியில் வில்லனாக களமிறங்கும் மம்முட்டி

By Manjula

சென்னை: பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 60 படத்தில் வில்லனாக மம்முட்டியும், தங்கையாக மியா ஜார்ஜும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஜில்லா படத்தில் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடித்த விஜய் இந்தப் படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.

இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்

விஜய்

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. தெறியைத் தொடர்ந்து பரதன் இயக்கத்தில் தனது 60 வது படத்தில் விஜய் நடிக்கிறார்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

துப்பாக்கி, ஜில்லா படங்களைத் தொடர்ந்து 3 வது முறையாக இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து காஜல் அகர்வால் ரொமான்ஸ் பண்ணப் போவதாக கூறுகின்றனர். இதற்காகத் தற்போது அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மியா ஜார்ஜ் ,ஐஸ்வர்யா ராஜேஷ்

மியா ஜார்ஜ் ,ஐஸ்வர்யா ராஜேஷ்

அமரகாவியம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான மியா ஜார்ஜ் இந்தப் படத்தில் விஜய்யின் தங்கையாக நடிக்க, மற்றொரு முக்கியமான வேடத்திற்கு காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷை கேட்டிருக்கின்றனராம்.

மம்முட்டி

மம்முட்டி

இந்தப் படத்தில் வித்தியாசமாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை வில்லனாக நடிக்க படக்குழுவினர் ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான தனி ஒருவன் ஹிட்டடித்ததால் அதே பாணியில் மம்முட்டியை களமிறக்குகிறது விஜய் 60 படக்குழு. மேலும் இந்தப் படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் தனது மார்க்கெட் கோலிவுட்டில் உயரும் என்று மம்முட்டியும் நம்புகிறாராம்.இதற்காக 2 மடங்கு அதிகமான சம்பளம் அவருக்கு கூடுதலாக தரப்படவுள்ளதாம்.

ஜில்லா மோகன்லால்

ஜில்லா மோகன்லால்

ஏற்கனவே ஜில்லா படத்தில் மற்றொரு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து விஜய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் மம்முட்டி வில்லனாக நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X