விஜய்யின் 60 வது படத்தை இயக்கப்போவது யார்?

By Manjula

சென்னை: விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார், அடுத்து விஜயின் 59 வது படத்தை ராஜா ராணி படப்புகழ் அட்லீ இயக்குகிறார் என்பது உறுதியாகி விட்டது.

சமீபத்தில் விஜய் 59 படத்திற்கான பூஜைகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் மத்தியில் அடுத்த கேள்வி ஒன்று எழுந்துள்ளது. மில்லியன் டாலர் பெறுமானமுள்ள அந்தக் கேள்வி என்ன தெரியுமா?

விஜய்யின் 60 வது படத்தை இயக்கப் போவது யார் என்பதுதான்? தற்போது விஜயின் 60 வது படத்தை இயக்குவதில் 2 இயக்குனர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர்கள் இருவரில் யார் பெயரை விஜய் டிக் அடிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.

ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பிரபுதேவா ஆகியோர்தான் அந்த இருவரும். இவர்கள் இருவரில் விஜயை வைத்து படம் இயக்க யாருக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது பார்க்கலாம்.

ஏ.ஆர்.முருகதாஸ்- விஜய் கூட்டணி

ஏ.ஆர்.முருகதாஸ்- விஜய் கூட்டணி

ஏ.ஆர்.முருகதாஸ் விஜயை வைத்து துப்பாக்கி மற்றும் கத்தி என்று 2 மெகா ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். இதில் துப்பாக்கி படம் 100 கோடிப் பட்டியலில் இணைந்து விஜயின் அந்தஸ்தை உயர்த்திய படம். கத்தி படம் துப்பாக்கி அளவுக்கு இல்லை என்றாலும் நிறைய விருதுகளை விஜய்க்கு வாங்கிக் கொடுத்திருக்கிறது.

அகிராவில் பிஸியாக இருக்கும் முருகதாஸ்

அகிராவில் பிஸியாக இருக்கும் முருகதாஸ்

முருகதாஸ் தற்போது இந்தியில் அகிரா என்ற படத்தை சோனாக்ஷி சின்ஹாவை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார், (தமிழில் வெளிவந்து பலரின் வரவேற்பைப் பெற்ற மவுன குரு திரைப்படம் தான் அகிரா) இது முடிந்ததும் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விடுவார்.

விஜய்க்கு கதை ரெடி

விஜய்க்கு கதை ரெடி

முருகதாஸ் இந்திப் பட வேலைகளில் பிஸியாக இருந்தாலும் கூட விஜய்க்கான கதையை ரெடி பண்ணி விட்டாராம், விஜயின் சம்மதத்திற்காக காத்திருக்கிறார். விஜய் ஓகே சொல்லி விட்டால் மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி இணைய வாய்ப்புகள் அதிகம்.

பிரபுதேவா

பிரபுதேவா

போக்கிரி என்ற மாபெரும் ஹிட் படத்தை விஜயை வைத்துக் கொடுத்தவர் பிரபுதேவா, ஆனால் அடுத்து இவர் இயக்கத்தில் விஜய் நடித்த வில்லு குறி தவறியதால் இரண்டாவது ஹிட்டை இவரால் பெற முடியாமல் போய்விட்டது.

அக்சய்குமாருடன் பிஸியாக இருக்கும் பிரபுதேவா

அக்சய்குமாருடன் பிஸியாக இருக்கும் பிரபுதேவா

பிரபுதேவாவும் தற்போது இந்தியில் பிஸியாக அக்சய்குமார் - எமி ஜாக்சனை வைத்து சிங் இஸ் பிளிங் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் முடிந்ததும் தனது அடுத்த படத்தில் விஜயை இயக்க பிரபுதேவா ஆர்வமாக இருக்கிறார்.

விஜயின் பதிலுக்காக காத்திருக்கும் பிரபுதேவா

விஜயின் பதிலுக்காக காத்திருக்கும் பிரபுதேவா

விஜய்க்கு கதை ரெடி பண்ணிய பிரபுதேவா, கையோடு அதனை விஜயிடம் கூறி சம்மதம் கேட்டு இருக்கிறாராம். பிரபுதேவாவின் கதைக்கு சம்மதம் என்று விஜய் தரப்பில் இருந்து எந்த பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை. எனினும் நம்பிக்கையோடு காத்திருக்கிறாராம் பிரபுதேவா.

முருகதாசுடன் பணியாற்ற ஆர்வம் காட்டுகிறாரா விஜய்?

முருகதாசுடன் பணியாற்ற ஆர்வம் காட்டுகிறாரா விஜய்?

இவர்கள் இருவரில் எல்லா வகையிலும் சிறந்த இயக்குனராக முருகதாஸ் இருக்கிறார். விஜயை 100 கோடி கிளப்பில் இணைய வைத்தது, கத்தி மற்றும் துப்பாக்கி இரண்டையும் பிளாக் பஸ்டர்களாக கொடுத்தது இவற்றுடன் சேர்த்து 2 படங்களும் ஏகப்பட்ட விருதுகளையும் அள்ளிக் குவித்திருக்கின்றன. எனவே மூன்றாவது முறையும் முருகதாசுடன் இணைந்து பணியாற்ற விஜய் ஆர்வமாக இருப்பதாக கூறுகிறார்கள்.

புலியின் முடிவுக்காக காத்திருக்கும் விஜய்

புலியின் முடிவுக்காக காத்திருக்கும் விஜய்

தற்போது அட்லீயுடன் அடுத்த படத்தில் இணைந்தாலும் கூட புலியின் முடிவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறாராம் விஜய். விஜய் நடித்த படங்களிலேயே மிகவும் அதிகமான பொருட்செலவில் உருவான படம் புலி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி இயக்குனர்கள் இவரின் முடிவுக்காக காத்திருக்க இவரோ புலியின் முடிவுக்காக காத்திருக்கிறார். பார்க்கலாம் விஜய்யின் 60 வது படத்தை இயக்கும் அந்த அதிர்ஷ்டசாலி இயக்குநர் யார் என்று?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X