»   »  டென்ஷனில் இருக்கும் விஜய்யை குளிர வைக்க ஐரோப்பா அழைத்துச் செல்லும் அட்லீ

டென்ஷனில் இருக்கும் விஜய்யை குளிர வைக்க ஐரோப்பா அழைத்துச் செல்லும் அட்லீ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் 61 படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ஐரோப்பா செல்கிறது.

அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் அப்பா, இரண்டு மகன்களாக நடித்து வரும் படம் விஜய் 61. நித்யா, சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் உள்ளனர்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஐரோப்பா

ஐரோப்பா

அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ஐரோப்பா செல்கிறது. ஐரோப்பாவில் குளு குளு கிளைமேட்டில் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார் அட்லீ.

ஒரு மாதம்

ஒரு மாதம்

படக்குழு இன்று அல்லது நாளை ஐரோப்பா கிளம்பும் என்று கூறப்படுகிறது. ஒரு மாதம் ஐரோப்பாவில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அங்கு தான் முக்கிய காட்சிகளை படமாக்குகிறார்களாம்.

விஜய்

விஜய்

விஜய் 61 படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அதன் பிறகு ராஜஸ்தானில் நடைபெற்றது. ராஜஸ்தானில் கொளுத்தும் வெயிலை தாங்க முடியாமல் படக்குழு அவதிப்பட்டது. இதை பார்த்த விஜய் இடத்தை மாற்றுமாறு கூறியும் அட்லீ கேட்காததால் அவர் கடுப்பானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெறி

தெறி

ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடந்தபோது சமந்தாவின் தோழியான நீரஜா கோனா விஜய்யின் ஸ்டைலிஸ்டாக இருந்தார். ஐரோப்பா படப்பிடிப்பில் தெறி படத்தின் ஸ்டைலிஸ்டான மும்பையை சேர்ந்த கோமல் சஹானி விஜய்யை ஸ்டைலாக்க உள்ளார்.

English summary
Vijay 61 team is set to leave for Europe for the next schedule. The team will be camping there for a month filming important scenes.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil