'விஜய் 61' பற்றி கசிந்த 2 ரகசியம்: அட்லீ, இது உண்மையா?
சென்னை: விஜய் 61 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெறி படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் விஜய் 61. படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் துவங்கியது. பின்னி மில்ஸ் வளாகத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் விஜய்யின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் விஜய் மூன்று வேடங்களில் வருகிறாராம். அதில் ஒரு வேடத்தில் காவல் துறை அதிகாரியாம்.
விஜய் முன்னதாக போக்கிரி, ஜில்லா, தெறி ஆகிய படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். தெறியில் விஜய் குமார் ஐபிஎஸ்ஸாக அதிரடியாக நடித்திருந்தார்.
விஜய் 61 படத்தில் மூன்று ஹீரோயின்கள் உள்ள நிலையில் விஜய்யின் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications