கொல்கத்தா ஷூட்டிங் பாதிப்பு... அமெரிக்கா பறக்கிறது 'விஜய் 62' படக்குழு!

By Vignesh Selvaraj

Recommended Video

விஜய் 62 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!!!

சென்னை : விஜய்யின் 62-வது திரைப்படம் முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிறது. இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக கொல்கத்தாவில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. 'கத்தி' படம் எடுக்கப்பட்ட லொக்கேஷனிலும் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டது.

இந்நிலையில், அடுத்தகட்டமாக சில காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் படமாக்குவதற்காக படக்குழுவினர் அமெரிக்கா செல்லவிருக்கிறார்களாம்.

விஜய் 62

விஜய் 62

விஜய்யை வைத்து 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யின் 62-வது படத்தை தற்போது இயக்கி வருகிறார். துப்பாக்கி படத்தில் ராணுவ வீரரைப்பற்றிய கதையை படமாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், கத்தியில் விவசாயிகள் பிரச்னையை படமாக்கினார். 'விஜய் 62' படத்திலும் விவசாயிகள் பிரச்னை பேசப்படுகிறதாம்.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

விஜய்யின் 62-வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். சென்னை முட்டுக்காடு பகுதியில் 'விஜய் 62' ஷூட்டிங் நடைபெற்றது.

ஷூட்டிங்

ஷூட்டிங்

கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் பூஜையுடன் துவங்கிய படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை முட்டுக்காடு பகுதியில் செட் போட்டு சில காட்சிகளும், சண்டைக்காட்சிகளும் படமாக்கப்பட்டன.

கொல்கத்தா ஷூட்டிங்

கொல்கத்தா ஷூட்டிங்

பிறகு, கொல்கத்தாவிற்குச் சென்றது படக்குழு. அங்கு 'கத்தி' ஷூட்டிங் நடத்தப்பட்ட லொக்கேஷனில் சில காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அங்கு தொடர்ந்து ஷூட்டிங் நடத்துவதில் சில சிக்கல்கள் நிலவியதால் சென்னை திரும்பி காஞ்சிபுரத்தில் செட் அமைத்து ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் ஷூட்டிங்

அமெரிக்காவில் ஷூட்டிங்

இந்நிலையில், விஜய் 62 படக்குழு அமெரிக்கா பறக்க இருக்கிறதாம். அங்கு சில காட்சிகளையும், பாடல் காட்சிககளையும் ஷூட் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். 'தளபதி 62' படம் இந்த ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X