twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'சர்கார்': விஜய் 62 படத்திற்கு மாஸ் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் வேற லெவல்

    By Siva
    |

    Recommended Video

    மாஸ் தலைப்புடன் வந்த சர்கார்- வீடியோ

    சென்னை: விஜய் 62 படத்திற்கு சர்கார் என்று பெயர் வைத்துள்ளனர்.

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வரும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்தார்.

    இதையடுத்து அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    படத்திற்கு சர்கார் என்று பெயர் வைத்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் செம மாஸாக உள்ளார். விஜய் புது கெட்டப்பில் வாயில் தம்முடன் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தளபதி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

    தலைப்பே சும்மா தெறிக்குது அப்போ படம் எப்படி இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சர்கார் என்பதால் படத்தில் நிச்சயம் அரசியல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

    விஜய்யை முதல்வராக பார்க்கத் துடிக்கும் அவரின் ரசிகர்களுக்கு இந்த தலைப்பு பெருமகிழ்ச்சி அளித்துள்ளது.

    English summary
    Vijay's upcoming movie being directed by AR Murugadoss is titled as Sarkar. Vijay is looking great in the first look poster.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X