»   »  விஜய் 62 லேட்டஸ்ட் அப்டேட்ஸ்... ஈ.சி.ஆர் ஷூட்டிங், ஜெயமோகன் வசனம், பிரமாண்ட கார் சேஸ்!

விஜய் 62 லேட்டஸ்ட் அப்டேட்ஸ்... ஈ.சி.ஆர் ஷூட்டிங், ஜெயமோகன் வசனம், பிரமாண்ட கார் சேஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
'விஜய் 62' படத்திற்கு மியூசிக் டைரக்டர், ஆர்ட் டைரக்டர் யார்?- வீடியோ

சென்னை : 'விஜய் 62' திரைப்படம் முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக ஆரம்பித்துள்ளது. இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியுள்ளது.

இப்படத்தில் விஜய் மீனவர்கள் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை குறித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் வசனகர்த்தாவாக பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கமிட் ஆகியுள்ளார்.

விஜய் 62

விஜய் 62

அட்லீ இயக்கிய 'மெர்சல்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இவர்கள் காம்போவில் வெளியான 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

ஆகையால், இந்தப் படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. விஜய்யின் 62-வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

ஷூட்டிங் தொடக்கம்

ஷூட்டிங் தொடக்கம்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் பூஜையுடன் துவங்கிய படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

ஜெயமோகன் வசனம்

இந்நிலையில், இப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் '2.O' படத்திற்கும் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாடல் காட்சி ஷூட்டிங்

'விஜய் 62' படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் சென்னை ஈ.சி.ஆர் முட்டுக்காடு பகுதியில் செட் அமைக்கப்பட்டு துவங்கியுள்ளது. படத்தின் டைட்டில் பாடலுக்கு சோபி மாஸ்டர் கொரியோகிராஃபராக பணியாற்றுகிறார்.

பிரமாண்ட கார் சேஸிங் காட்சி

'கத்தி' படத்தைப் போல இந்தப் படமும் கொல்கத்தா கதைக்களம் சார்ந்ததாக இருக்குமாம். பிரமாண்டமான கார் சேஸிங் காட்சி ஒன்றும் கொல்கத்தாவில் ஷூட் செய்யப்பட இருக்கிறதாம். இதற்காக சென்னை ஷூட்டிங்கிற்குப் பிறகு கொல்கத்தா கிளம்புகிறது படக்குழு.

English summary
'Vijay 62' film shooting was started in Chennai. The first schedule shooting of 'Vijay62' has been set in Chennai ECR Muttukkadu. The famous writer Jayamohan committed in 'Vijay62' as a dialogue writer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil