'விஜய் 62' படத்திற்கு மியூசிக் டைரக்டர், ஆர்ட் டைரக்டர் யார்? - லேட்டஸ்ட் அப்டேட்

By Vignesh Selvaraj

Recommended Video

'விஜய் 62' படத்திற்கு மியூசிக் டைரக்டர், ஆர்ட் டைரக்டர் யார்?- வீடியோ

சென்னை : அட்லீ இயக்கத்தில் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 62-வது படத்தில் நடிக்கிறார் விஜய்.

விஜய் - முருகதாஸ் கூட்டணி 'கத்தி', 'துப்பாக்கி' ஆகிய இரு படங்களின் கலக்கல் வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக இணைவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில், விஜய் 62 படத்தில் பணியாற்றும் படக்குழுவினர் பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறாராம்.

விஜய் - முருகதாஸ் கூட்டணி

விஜய் - முருகதாஸ் கூட்டணி

நடிகர்கள் ஒரு சில இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அவர்களது ரசிகர்கள் ஆசைப்படுவர். அப்படி விஜய் ரசிகர்கள் மிகவும் ஆசைப்படுவது முருகதாஸ் - விஜய் கூட்டணி தான். இந்தக் கூட்டணி மீது ரசிகர்களுக்கு அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது.

மூன்றாவது முறையாக கூட்டணி

மூன்றாவது முறையாக கூட்டணி

இவர்கள் இருவரும் இணைந்து துப்பாக்கி, கத்தி என இரண்டு வெற்றி படங்களை கொடுத்துவிட்டனர். மூன்றாவது முறையாக இணையும் இவர்களது படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இசையமைப்பாளர் ரஹ்மான்

இசையமைப்பாளர் ரஹ்மான்

இந்த நிலையில் விஜய் 62 படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. விஜய் - முருகதாஸ் கூட்டணியில் முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்தின் மூலம் இணையவிருக்கிறார்.

ரஹ்மான்

ரஹ்மான்

விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவான 'துப்பாக்கி' படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜும், 'கத்தி' படத்திற்கு அனிருத்தும் இசையமைத்தனர். விஜய் அட்லீ இயக்கத்தில் கடைசியாக நடித்த 'மெர்சல்' படத்திற்கு ரஹ்மான் இசையமைத்தார். இந்தப் படத்தின் மூலம் விஜய்யின் அடுத்தடுத்த படங்களில் இணைகிறார் ரஹ்மான்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

விஜய் முருகதாஸ் ரஹ்மான் என மெர்சலான கூட்டணி உருவாக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் ஹிட் அடிக்கும் என எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆர்ட் டைரக்டர்

ஆர்ட் டைரக்டர்

இந்நிலையில் இப்படத்தில் கலை இயக்குனராக டி.சந்தானம் கமிட்டாகியுள்ளார். இவர் முருகதாஸ் உடன் இணைவது இதுவே முதல் முறை. இவர் விக்ரம் நடித்த 'தெய்வ திருமகள்', தனுஷ் நடித்த 'அனேகன்' ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.

கலை இயக்குநர் டி.சந்தானம்

கலை இயக்குநர் டி.சந்தானம்

கலை இயக்குநர் டி.சந்தானம் சிறப்பான கலை இயக்கத்திற்காக கார்த்தி நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்', சித்தார்த் நடித்த 'காவிய தலைவன்' ஆகிய படங்களுக்காக மாநில அரசின் விருதுகள் பெற்றிருக்கிறார்.

எடிட்டர்

எடிட்டர்

விஜய் 62 படத்தின் எடிட்டராக 8 முறை தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத்தும், ஒளிப்பதிவாளராக 'சோலோ', 'அங்கமாலி டைரீஸ்' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கிரிஷ் கங்காதரனும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக முன்பே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X